உங்களை முட்டாளக்கும் ஏர்டெல், வோடஃபோன் மற்றும் ஐடியா

0

ஜியோ நிறுவனத்துகு எதிராக 84 நாட்களுக்கு தினமும் 1ஜிபி டேட்டா வழங்க தொடங்கியுள்ள ஏர்டெல், வோடஃபோன் மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்கள் வழங்க தொடங்கியுள்ளன.

ஏர்டெல், வோடஃபோன் மற்றும் ஐடியா

ஜியோ நிறுவனம் தனது பிரைம் வாடிக்கையாளர்களுக்கு 84 நாட்களுக்கு 84ஜிபி டேட்டாவை ரூ.399 கட்டணத்தில் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் வழங்குகின்றது.

ஏர்டெல்

84 ஜிபி டேட்டா தினமும் 84 நாட்களுக்கு வழங்குவதுடன் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் ஏர்டெல் வழங்குகின்றது. 4ஜி சேவையை பயன்படுத்தும் பயனார்களில் குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கின்றது. உங்களுக்கு இந்த சலுகை கிடைக்குமா என்பதனை அறிய மை ஏர்டெல் ஆப் வழியாக அறியலாம்.

இதுதவிர ஏர்டெல் நிறுவனம் ரூ.294 கட்டணத்தில் 84 ஜிபி டேட்டா தினமும் 1ஜிபி என மொத்தம் ஏர்டெல் பயனாளர்களுக்கு வழங்குவதுடன் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை ஏர்டெல் டூ ஏர்டெல் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கின்றது. மற்றொரு திட்டமான ரூ.449 கட்டணத்தில் 84 ஜிபி டேட்டா தினமும் 84 நாட்களுக்கு வழங்குவதுடன் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் ஏர்டெல் வழங்குகின்றது.

ஏர்டெல் வழங்குகின்ற பெரும்பாலான சலுகைகளை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கிடைப்பதில்லை.

ஐடியா

ஐடியா நிறுவனம் 3ஜி மற்றும் 4ஜி பயனாளர்களுக்கு சிறப்பு திட்டங்களை அறிவித்திருந்தாலும், அவைகளும் ஏர்டெல் போன்றே குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ஒரு சில தொலைத்தொடர்பு வட்டங்களில் மட்டுமே கிடைக்கின்றது.

ரூ.453 திட்டத்தில் 84 ஜிபி டேட்டா மற்றும் 84 நாட்களுக்கு வழங்குகின்ற இந்த சலுகை முதல்முறை ரீசார்ஜ் செய்பவர்களுக்கு மட்டுமே பொருந்துகின்றது.

வோடஃபோன்

வோடஃபோன் வை-ஃபை சேவை இடம்பெற்றுள்ள கல்லூரிகளில் உள்ள மாணவர்களுக்கு கூடுதலான சலுகைகளை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது.

ரூ. 244 கட்டணத்தில் 70 நாட்கள் வேலிடிட்டி பெற்ற இந்த புதிய பேக்கினை மை வோடஃபோன் ஆப் வழியாக பெறலாம். இந்த பிளானில் தினமும் ஒரு ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற உள்ளூர், வெளியூர் வோடபோன் அழைப்புகள் வழங்குகின்றது. மற்ற நெட்வொர்க்குகளுக்கு உங்கள் பிளானின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படும்.

இந்த திட்டத்தில் சிறப்பு சலுகையாக 5 சதவிகித கேஸ்பேக் சலுகையை வோடஃபோன் வழங்குகின்றது. அதாவது ரூ.9.70 டாக்டைம் வழங்குகின்றது.

மேலே வழங்கப்பட்டுள்ள சலுகை 3ஜி மற்றும் 4ஜி வாடிக்கையாளர்கள் முதன்முறையாக பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே 70 நாட்கள் மற்றவர்களுக்கு 35 நாட்கள் மட்டுமே கிடைக்கும்.

ரூ. 346 கட்டணத்தில் தினமும் 1ஜிபி 3ஜி அல்லது 4ஜி டேட்டா வழங்கப்பட்டு 56 நாட்கள் கால அளவு என வெளியிடப்பட்டுள்ளது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூர் என எந்த நெட்வொர்க் அழைப்புகளுக்கும், தினசரி அதிகபட்சமாக 300 நிமிடம் மற்றும் ஆனால் வாரத்திற்கு அதிகபட்சமாக 1200 நிமிடம் மட்டுமே வழங்கப்பட உள்ளது.

இந்த திட்டத்திலும் சிறப்பு சலுகையாக 5 சதவிகித கேஸ்பேக் சலுகையை வோடஃபோன் வழங்குகின்றது. அதாவது ரூ.17.30 டாக்டைம் வழங்குகின்றது.

ஜியோ

மற்ற நெட்வொர்க்குகள் போல குறிப்பிட்ட சில பயனாளர்கள் அல்லது புதிய பயனாளர்கள் என அல்லாமல் நாடு முழுவதும் உள்ள அனைத்து ஜியோ சிம் பயனாளர்களுக்கும் பல்வேறு கூடுதல் டேட்டா சலுகைகளைகு உள்பட ரூ.99 பிரைம் சந்தா கட்டணம் செலுத்திய அனைத்து பயனாளர்களுக்கும் எந்த  நிபந்தனையும் இல்லாமல் ரூ.399 கட்டணத்துக்கு 84 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் வழங்குகின்றது.

புதிதாக நமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பயன்படுத்தாத ஜியோ டேட்டாவை வேலிடிட்டிக்கு பிறகு ஜியோ மீண்டும் வழங்குவதாக தெரிய வந்துள்ளது.

மற்ற தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் போல குறிப்பிட்ட ஒருசிலருக்கு மட்டும் அல்லது தொலைத்தொடர்பு வட்டங்களுக்கு வழங்குப்படுவது மற்றும் சிலருக்கு 84 நாட்கள், சிலருக்கு 28 நாட்கள் என குளறுபடி செய்யாமல் ஜியோ வழங்குகின்றது.

Comments

comments