ஜியோ ஃபை இலவசமாக வாங்குவது எப்படி ?

Ads

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ ஃபை 4ஜி டாங்கில் இலவசமாக பெறும் வகையிலான சலுகையை வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜியோ ஃபை இலவசம்

சமீபத்தில் ஜியோ கேர் டிவிட்டர் பக்கத்தில் வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் நீங்கள் பயன்படுத்தி வரும் பழைய டாங்கில் மற்றும் ரூட்டர் போன்ற டிவைஸ்களை ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர் மற்றும் மினி ஸ்டோர் போன்றவற்றில் கொடுத்த புதிய ஜியோ ஃபை ரூட்டரை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

100 சதவிகித கேஸ்பேக் பிளான்

அதாவது நீங்கள் எந்தவொரு நெட்வொர்கின் டேட்டா கார்டு பயன்படுத்தி வந்தாலும் 100 சதவித எக்ஸ்சேன்ஞ் சலுகையை ஜியோ அறிவித்துள்ளது. அதாவது இயங்குகின்ற டேட்டாகார்டை மினி ஸ்டோரில் கொடுத்து புதிதாக வாங்குகின்ற ஜியோஃபை கருவிக்கு ரூ.1999 மற்றும் முதல் ஜியோ பிரைம் உள்பட முதல் மாத ரீசார்ஜ் என ரூபாய் 408 (பிரைம் + முதல் மாத கட்டணம்) பிளான் திட்டத்தை தேர்ந்தெடுத்தால் ரூபாய் 2010 மதிப்புள்ள டேட்டா சலுகையை பெறலாம்.

எனவே ஜியோஃபை கருவி விலை தொகை டேட்டா கிடைப்பதனால் ஜியோஃபை இலவசம் என்றாகிவிடும், இதற்கு ரூபாய் 408 மட்டுமே ரீசார்ஜ் கட்டணமாக 84 நாட்களுக்கு செலுத்தப்பட்டிருக்கும்.

புதிய ஜியோ ஃபை பிளான்

புதிதாக டாங்கில் வாங்குபவர்கள் ரூ.1999 விலையில் வாங்குவதுடன் முதல் ஜியோ பிரைம் உள்பட முதல் மாத ரீசார்ஜ் என ரூபாய் 408 (பிரைம் + முதல் மாத கட்டணம்) பிளான் திட்டத்தை தேர்ந்தெடுத்தால் ரூபாய் 1005 மதிப்புள்ள டேட்டா சலுகையை பெறலாம்.

அதாவது  ரூ.1005 விலை மதிப்பிலான ஜியோ பூஸ்டர் பேக் ரூ.201 மதிப்பில் மாதந்தோறும் 5 ஜிபி டேட்டா 5 மாதங்களுக்கு வழங்கப்படுவதனால், எனவே இதன் மதிப்பு ரூ 1005 ஆகும்.

மேலும் படிக்க – ஜியோ பை வாங்கினால் லாபாமா ? நஷ்டமா ?

Comments

comments