ரிலையன்ஸ் ஜியோ 4ஜி அதிரடி அன்லிமிட்டேட் டேட்டா மற்றும் கால்கள் – LYF மொபைல் விலை ரூ.2999 முதல்

Ads
ரிலையன்ஸ் சில்லறை வர்த்தக பிரிவின்  LYF பிராண்டு மொபைல்களின் விலை 25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.2999 விலையில்  LYF 4G LTE ஆதரவுடன் 3 மாத அன்லிமிட்டேட் டேட்டா மற்றும்  அழைப்புகளை பெற இயலும்.

 LYF பிராண்டு மொபைல்களுடன் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவையுடன் கூடிய பன்டில் சலுகையில் வாங்கும்பொழுது 3 மாதம் வரையறையற்ற டேட்டா மற்றும் அழைப்புகளை பெற இயலும். நாடு முழுவதும் சோதனை ஓட்டத்தில் உள்ள ஜியோ மொபைல் சேவை அடுத்த சில மாதங்களில் முறைப்படி அலுவல் ரிதீயாக இயங்க உள்ளது.

 LYF பிராண்டில் உள்ள ஃபிளேம் , வின்ட் , வாட்டர் மற்றும் எர்த் ஆகிய பிரிவுகளில் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. தொடக்க நிலை மொபைல்களான ஃபிளேம் 3 ,ஃபிளேம் 4 ,ஃபிளேம் 5 மற்றும் ஃபிளேம் 6 ஆகிய மொபைல்கள் ரூ.3,999 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதிரடியாக ரூ.1000 குறைத்து ரூ.2999 விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. ஃபிளேம் 2 மொபைல்போன் ரூ.4799 அறிமுகம் செய்யப்பட்டு ரூ.1200 குறைக்கப்பட்டு 3599 விலையில் வந்துள்ளது.

 LYF வாட்டர் வரிசை மொபைல் புதிய விலை பட்டியல்

வாட்டர் 1 – ரூ.14,699 (குறைப்பு ரூ.300 )
வாட்டர் 2 – ரூ. 9,699 (குறைப்பு ரூ.4000)
வாட்டர் 5 – ரூ. 7,599  (குறைப்பு ரூ.4100)

 LYF வின்ட் வரிசை மொபைல் புதிய விலை பட்டியல்

வின்ட் 6 – ரூ.5499 (குறைப்பு ரூ.1000)
பல நவீன வசதிகளுடன் ரிலையன்ஸ் LYF பிராண்டின் டாப் மாடலாக விற்பனைக்கு வந்த எர்த் 2 ரூ.20,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டு அதிரடியாக ரூ.1000 குறைக்கபட்டு ரூ.19,999 விலையில் கிடைக்கும்.

 இந்தியாவின் முன்னனி பணக்காரர்களான அம்பானி சகதோர்கள் குழுமத்தின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சார்பில் உருவாகி இருக்கும் மிகப்பெரிய முதலீட்டினை கொண்டு தொடங்கப்பட்டுள்ள ரிலையன்ஸ் ஜியோ 4ஜி மொபைல் சேவை மிக சிறப்பான இணையதள சேவையுடன் தெளிவான அழைப்புகளை ஏற்படுத்தும் வகையில் பல நவீன அம்சங்களை பெற்றுள்ளது.

மேலும் படிக்க ; ரிலையன்ஸ் ஜியோ இலவச டேட்டா பெறும் வழிமுறை

ரிலையன்ஸ் சிடிஎம்ஏ வாடிக்கயாளர்களுக்கு 10ஜிபி டேட்டா சலுகை


48 HOUR SALE OFFERS:

  • Up to 40% OFF on ELECTRONICS
  • Up to 70% OFF on FASHION END OF SEASON SALE
  • Up to 60% OFF on BOOKS & ENTERTAINMENT with a minimum 50% OFF on TOP 25 books.
  • Up to 60% OFF on HOME & KITCHEN . 
  • Up to 60% OFF on TOYS, HOUSEHOLD ITEMS & PERSONAL CARE .
Shop Now…More details  click below this image 


recharge

Comments

comments