டூயல் கேமரா வசதியுடன் எல்ஜி ஜி6 ஸ்மார்ட்போன் அறிமுகம் – MWC17

Ads

2017 சர்வதேச மொபைல் காங்கிரஸ் கருத்தரங்கில் எல்ஜி G6 ஸ்மார்ட்போன் கூகுள் அசிஸ்டென்ட் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 5.7 அங்குல QHD உடன் கூடுதலாக முழுவிஷன் டிஸ்பிளே வசதியை பெற்றதாக ஜி6 வந்துள்ளது.

எல்ஜி G6

உலகின் முதல் டால்பி விஷன் மற்றும்  HDR10 போன்றவற்றின் உதவியுடன் மிக சிறப்பான படங்களை தரவல்ல மாடலாக அமைந்துள்ளது. கூகுள் அசிஸ்டென்ட் ,  360-டிகிரி கேமரா , விரிச்சுவல் ரியாலிட்டி (Virtual Reality -VR) உள்பட பல வசதிகளை பெற்றிருந்தாலும் 7 மாதங்கள் பழைய சிப்செட் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 821 Soc யை பெற்றுள்ளது.

18:9 எனள அளவிலான ஆஸ்பெக்ட் விகிதத்தில் அமைந்துள்ள 5.7  அங்குல QHD திரையுடன் வந்துள்ள இந்த கருவியில் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 821 Soc பிராசஸருடன் இணைந்த 4GB ரேம் உடன் இணைந்த 32GB மற்றும் 64GB வரையிலான உள்ளடங்கிய சேமிப்பை பெற்று விளங்குகின்றது. கூடுதலாக மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக 2TB வரை சேமிப்பு திறனை விரிவாக்க இயலும்.

கேமரா

பின்புறத்தில் அமைந்து இரட்டை கேமராக்கள் 13 மெகாபிக்சலுடன் அமைந்து சிறப்பான படங்கள் மற்றும் உயர்தர 4கே ஹெச்டி வீடியோக்களை தரும் வகையில் அமைந்துள்ளது. முன்புறத்தில் 5 மெகாபிக்சல் கேமரா அமைந்துள்ளது. OIS எனப்படும் சிறந்த படங்களை தர உதவும் அமைப்பும் பெற்று விளங்குகின்றது.

 

பேட்டரி

நீக்கும் வகையிலான அம்சத்தை பெற்றுள்ள பேட்டரியில் மிகவேகமாக சார்ஜ் ஏறும் குயீக் சார்ஜ் 3.0 வினை பெற்று 3330mAh பேட்டரி சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும்.

மற்றவை

வாட்டர் ப்ரூஃப் , தூசியிலிருந்து பாதுகாக்கும் ரெசிஸ்டென்ட் , கைரேகை ஸ்கேனர் , ஆண்ட்ராய்டு 7.1 நெளகட் இயங்குதளத்தில் செயல்படுகின்ற ஜி6 ஸ்மார்ட்போனில் Wi-Fi 802.11/b/g/n/ac, பூளூடுத் 4.2, ஜிபிஎஸ், 4G LTE, VoLTE, USB Type-C 2.0 மற்றும் என்எஃப்சி போன்றவை இடபெற்றுள்ளது.

இதுவரை கூகுள் பிக்சல் மொபைல்களில் மட்டுமே இருந்த வந்த கூகுள் அசிஸ்டென்ட் எல்ஜி G6 மொபைலில் முதன்முறையாக கூகுள் அசிஸ்டென்ட் வசதி சேர்க்கப்பட்டு OK Google வாயிலாக நேவிகேஷன் , வானிலை , வைஃபை உள்பட பல வசதிகளை பெறலாம்.

எல்ஜி G6 மொபைல் விலை

கருப்பு , வெள்ளை மற்றும் பிளாட்டினா போன்ற வண்ணங்களுடன் வந்துள்ள எல்ஜி ஜி6 ஸ்மார்ட்போனின் விலை விபரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை

Comments

comments