சாம்சங் கேலக்ஸி S8, கேலக்ஸி S8+ அறிமுகம்

Ads

உலகயளவில் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய சாம்சங் கேலக்ஸி S8 மற்றும் சாம்சங் கேலக்ஸி S8+ விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 21 முதல் சர்வதேச அளவில் விற்பனைக்கு கிடைக்கும்.

சாம்சங் கேலக்ஸி S8, கேலக்ஸி S8 பிளஸ்

  • சாம்சங் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனில் 5.8 அங்குல க்வாட் HD+ சூப்பர் AMOLED திரையுடன்
  • சாம்சங் கேலக்ஸி S8 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6.2 க்வாட் HD+ சூப்பர் AMOLED திரையுடன்
  • சாம்சங் பிக்ஸ்பை (Bixby) உடன் அறிமுகம் செயப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி S8 மற்றும் சாம்சங் கேலக்ஸி S8+ ஸ்மார்ட்போன்களில் அமேசான் அலெக்ஸா, கூகுள் அசிஸ்ட் மற்றும் ஆப்பிள் ஸ்ரீ போன்ற ஆப்ஸ்களுக்கு சவால் விடுக்கும் வகையிலும் அவற்றை விட சிறப்புமிக்க செயற்கை நுன்னறிவு கொண்ட பிக்ஸ்பை (Bixby) மிக சிறப்பான வாய்ஸ் அசிஸ்ட் வசதியாக விளங்கும் என சாம்சங் தெரிவிக்கின்றது.

ஆண்ட்ராய்டு நௌகட் 7.0 இங்குதளத்தில் செயல்படுகின்ற இரு மொபைல்களிலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியுடன்  கேலக்சி S8 ஸ்மார்ட்போனில் 5.8 அங்குல க்வாட் HD+ சூப்பர் AMOLED , கேலக்சி  S8 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6.2 அங்குல க்வாட் HD+ சூப்பர் AMOLED திரையுடன் இரு மொபைல்களும் 1440×2960 பிக்சல் தீர்மானத்துடன் 531 ppi அடர்த்தியை பெற்று விளங்குகின்றது.

இரு மாடல்களிலும் சாம்சங்  Exynos பிராசஸருடன் இணைந்த உயர்ரக க்வால்காம் ஸ்னாப்டிராகன் 835 soc உடன் இணைந்து செயல்படுகின்ற 4GB ரேம் பெற்று 64GB வரையிலான இன்ட்ரன்ல் மெமரி வசதியுடன் 256GB வரை மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக அதிகரிக்கலாம்.

இரு ஸ்மார்ட்போன்களிலும் 12 மெகாபிக்சல் டூயல் பிக்சல் ரியர் கேமரா வசதியுடன் , முன்புறத்தில் செல்ஃபீ படங்களுக்கு ஏற்ற 8 மெகாபிக்சல் கேமரா ஆப்ஷனை கொண்டுள்ளது. இரு மாடல்களிலும் உயர்தர 4K வீடியோ பதிவு செய்யும் திறன் பெற்று விளங்குகின்றது. பேட்டரி திறனில் கேலக்ஸி S8 மொபைலில் 3000mAh திறன் மற்றும் சாம்சங் கேலக்ஸி S8+ மொபைலில் 3500mAh திறன் பெற்று விளங்குகின்றது.

சாம்சங் பிரத்யேக இயர்போன்களை AKG by Harman பிராண்டில் ($99) ரூ. 6500 மதிப்பில் தனியாக  வழங்குகின்றது. மேலும் கூடுதல் விருப்பங்களாக  யூஎஸ்பி டைப் சி , மிக வேகமாக சார்ஜ் ஏறும் வகையிலான ஃபாஸ்ட் சார்ஜிங் போன்றவற்றுடன் நீர் புகா IP68 சான்று , 4G LTE (Cat. 16), வை-ஃபை 802.11ac (2.4GHz, 5GHz), ப்ளூடுத் v5.0, NFC மற்றும் GPS போன்றவை உள்ளது.

173 கிராம் எடை கொண்ட மொபைல்களில்  பிளாக், கிரே, ப்ளூ, சில்வர், மற்றும் கோல்டு போன்ற வண்ணங்களில் கிடைக்கும்.

அமெரிக்கா விலை பட்டியல்

Galaxy S8 –  $750 (Rs. 48,700)

Galaxy S8+ – $850 (Rs. 55,200)

 

Comments

comments