நூபியா M2 லைட் ஸ்மார்ட்போன் ரூ.13,999 விலையில் அறிமுகம் – முழுவிபரம்

Ads

ZTE ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் இந்திய சந்தையில் நூபியா M2 லைட் ஸ்மார்ட்போனை ரூ.13,999 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. முன்புறத்தில் 16MP கேமராவை பெற்று விளங்குகின்றது.

நூபியா M2 லைட்

வருகின்ற மே 9ந் தேதி முதல் அமேஸான் தளத்தில் பிரத்யேகமாக பகல் 12 மணி முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ள புதிய  நூபியா எம்2 லைட் ஸ்மார்ட்போனில் சிறப்பான புகைப்படங்களை பெறும் வகையில் நியோவிஷன் 6.5 நுட்பத்தினை பெற்ற கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளது.

புதிய எம்2 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 6.0 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட நூபியா 4.0 தளத்தில் செயல்படுவதுடன் 5.5 அங்குல எச்டி டிஸ்பிளே 720×1280 பிக்சல் தீர்மானத்துடன், மீடியாடெக் ஹீலியோ P10 (MT6750) பிராசஸருடன் கூடிய 4ஜிபி ரேம் பெற்று செயல்படுவதுடன், 32 ஜிபி உள்ளடங்கிய மெமரியை பெற்றதாக வந்துள்ளது.

டிஎஸ்எல்ஆர் கேமராக்களுக்கு இணையான படங்களை வழங்கும் வகையிலான நியோவிஷன் 6.5 நுட்பத்தினை பெற்ற 13 மெகாபிக்சல் கேமரா பின்புறத்திலும், 5P லென்ஸ், f/2.0 போன்றவற்றை பெற்ற 16 மெகாபிக்சல் கேமரா செல்ஃபீ படங்கள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என முன்புறத்தில் வழங்கப்பட்டுள்ளது.

நீக்க இயலாத வகையிலான 3000mAh திறன் கொண்ட பேட்டரியுடன் ஃபாஸ்ட் சார்ஜிங் நுட்பத்துடன் கூடியதாக வந்துள்ள நூபியா M2 லைட் ஸ்மார்ட்போனில் மற்ற விருப்பங்களாக 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, புளூடூத் 4.0, மற்றும் யூஎஸ்பி போன்றவற்றுடன் 32 ஜிபி சேமிப்பு வசதியை 128ஜிபி வரை நீட்டிக்கும் வகையிலான மைக்ரோஎஸ்டி அட்டை பொருத்துவதற்கான ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.

மே 9ந் தேதி பகல் 12 மணி முதல் அமேஸான் தளத்தில் ரூபாய் 13,999 விலையில் இசட்டிஇ நூபியா M2 லைட் விற்பனைக்கு கிடைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

comments