ரூ. 6,999 விலையில் மோட்டோ சி ப்ளஸ் விற்பனைக்கு வந்தது..!

Ads

இந்திய சந்தையில் மற்றொமொரு பட்ஜெட் ரக 4ஜி ஸ்மார்ட்போன் மோட்டோ சி ப்ளஸ் ரூ.6999 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.நாளை முதல் ஃபிளிப்கார்ட் தளத்தில் கிடைக்க உள்ளது.

மோட்டோ சி ப்ளஸ்

மோட்டோரோலா நிறுவனத்தின் சமீபத்தில் வெளியான ரூ.5,999 விலையில் வெளியான மோட்டோ சி மாடலை தொடர்ந்து புதிய Moto C plus ஸ்மார்ட்போனில் 4000mAh திறன் பெற்றுள்ள சக்திவாய்ந்த பேட்டரி பொருத்தப்பட்ட்டுள்ளது.

டிசைன் மற்றும் டிஸ்பிளே

மோட்டோ மொபைல்களுக்கு உரித்தான அடிப்படை டிசைன் அம்சங்களை பெற்றதாக வந்துள்ள மோட்டோ சி ப்ளஸ் கருவியில் வெள்ளை, கோல்டு மற்றும் கருப்பு நிறங்கள் கிடைக்க உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5 இன்ச் ஹெச்டி திரையுடன் 720×1280 பிக்சல் தீர்மானத்தை பெற்றதாக வந்துள்ளது. இந்த கருவியின் அளவுகள் 145.5 x 73.6 mm x 9 mm மற்றும் 154 கிராம் எடை கொண்டதாகும்.

பிராசஸர் மற்றும் ரேம்

ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தில் செயல்படுகின்ற மோட்டோ C ப்ளஸ் மாடலில் 1.35 GHz குவாட் கோர் பிராசஸருடன் மீடியாடெக் MT6737 பிராசஸர் பெற்று 1GB ரேம் மற்றும் 2GB ரேம் என இருவிதமான ஆப்ஷன் பெற்று 16ஜிபி உள்ளடங்கிய சேமிப்பை பெற்று கூடுதலாக நினைவகத்தை நீட்டிக்க 32ஜிபி மைக்ரோஎஸ்டி ஆப்ஷன் இடம்பெற்றுள்ளது.

கேமரா

720p தீர்மான வீடியோவை பதிவு செய்யும் வகையிலான 5 மெகாபிக்சல் ஆட்டோஃபோகஸ்,f/2.2 அப்ரேச்சர் மற்றும் எல்இடி ஃபிளாஷ் போன்ற விருப்பங்களை பெற்ற கேமரா பின்பகுதியிலும், செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு எல்இடி ஃபிளாஷ் கொண்ட 2 மெகாபிக்சல் கேமரா பெற்றுள்ளது.

பேட்டரி

நீக்கும் வகையிலான அமைப்பை பெற்ற 4000mAh பேட்டரியால் இயக்கப்படுகின்ற கருவியாக அமைந்துள்ளது.

மற்ற விருப்பங்கள்

இரட்டை சிம் கார்டு, 4G LTE மற்றும் VoLTE உடன் 3ஜி, வை-ஃபை 802.11 b/g/n, புளூடூத் 4.2, ஜிபிஎஸ், மற்றும் யூஎஸ்பி போன்றவற்றை பெற்றுள்ளது.

விலை மற்றும் சிறப்பு சலுகைகள்

ரூ.6,999 விலையில் கிடைக்க உள்ள மோட்டோ C Plus ஸ்மார்டபோன் ஃபிளிப்கார்ட் வழியாக ஜூன் 20ந் தேதி 12 மணிக்கு விற்பனைக்கு கிடைக்க உள்ளது. மேலும் சிறப்பு சலுகையாக ஜியோ பிரைம் பெறாத வாடிக்கையாளர்கள் ஜியோ பிரைம் வசதி பெறுவதுடன் கூடுதலாக 30ஜிபி வரை டேட்டா பெறுவதுடன், ரூ.2499 மதிப்பு மோட்டோரோலா பல்ஸ் ஹெட்செட் ரூ.749 விலையில் கிடைக்க உள்ளது. கூடுதல் சலுகையாக மோட்டோ சி பிளஸ் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 20 சதவிகித சிறப்பு சலுகையை ஜூன் 24ந் தேதிக்கு பிறகு ஆடை வாங்குபவர்கள் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

comments