ரூ.500க்கு ஜியோ 4ஜி போன் பற்றி தெரியவேண்டிய 5 அம்சங்கள்..!

Ads

முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் குழுமத்தின் அங்கமாக விளங்குகின்ற ஜியோ 4ஜி சேவையை தொடர்ந்து லைஃப் பிராண்டில் புதிதாக ரூ. 500 க்கு 4ஜி வோல்ட்இ ஆதரவுடன் கூடிய மொபைலை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

4ஜி வோல்ட்இ ஃபீச்சர் போன்

தொலைதொடர்பு துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள ஜியோ நிறுவனம் தற்போது 11.2  கோடிக்கு மேற்பட்ட பயனாளர்களை கொண்ட நெட்வொர்காக விளங்கி வருகின்ற சூழ்நிலையில் கிராம்ப்புற பகுதிகளில் 2ஜி சேவையை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் ஃபீச்சர் மொபைல் விரும்பிகளுக்கு என 4ஜி வோல்ட்இ ஆதரவு பெற்ற மொபைலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

அதாவது 2ஜி வாடிக்கையாளர்களை நேரடியாக 4ஜி சேவைக்கு மாற்றுவதனை நோக்கமாக கொண்டு திட்டமிட்டுள்ளது.

வசதிகள்

அடிப்படையான ஃபீச்சர் போன்களை போல வசதிகளை பெற்றிருப்பதுடன் கூடுதலாக ஜியோ ஆப்ஸ்களான ஜியோ ம்யூசிக் உள்பட ஜியோ நியூஸ், ஜியோ மணி போன்ற அம்சங்களை ப்ரிலோடு செயப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2.4 அங்குல கலர் டிஸ்பிளே வசதியுடன் 512எம்பி ரேம் பெற்று 4ஜிபி அல்லது 2ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு பெற்றதாக வருவதுடன் கூடுதல் சேமிப்பை பெற மேக்ரோஎஸ்டி அட்டை வழியாக விரிவுபடுத்தலாம்.4ஜி வோல்ட்இ, வைஃபை, பூளூடுத் போன்ற அம்சங்களை பெற்றிருக்கலாம்.

அறிமுகம்

வருகின்ற ஜூலை 21ந் தேதி நடைபெற உள்ள  ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வருடாந்திர பொது கூட்டத்தில் இந்த மாடல் குறித்து முக்கிய விபரங்கள் மற்றும் ஜியோஃபைபர், ஜியோ டிடிஎச் ஆகியவை குறித்தும் அறிவிக்கப்படலாம். மேலும் விற்பனைக்கு ஆகஸ்ட் 15ந் தேதி சுதந்திர தினத்தன்று அறிமுகம்  செய்யப்படலாம்.

விலை

பல்வேறு வகையான தகவல்கள் விலை குறித்து வெளிவந்திருந்தாலும் ரூ.500 அல்லது ரூ.675-ரூ.950 விலைக்குள் அடிப்படை மாடல் அறிமுகம் செய்யப்படலாம். கூடுதல் வசதிகளை பெற்ற மாடல் ரூ. 1800 விலையில் கிடைக்கலாம், இதுதவிர உயர்ரக போன் ரூ. 2369 விலையிலும் கிடைக்கலாம்.

எங்கே வாங்கலாம்

ஆரம்பத்தில் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர் போன்றவற்றில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற இந்த லைஃப் 4ஜி வோல்டி ஃபீச்சர் மொபைல் சந்தையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தலாம்.

ஜியோவுக்கு புதிய ஆபர்

ஜூலை மாதம் 20 முதல் பல்வேறு ஜியோ ஆபர்கள் நிறைவடைவதனால் புதியதோர் பிளானை ஜியோ அறிமுகம் செய்ய வாய்ப்புகள் உள்ளது.

Comments

comments