ரூ.5,990 விலையில் கார்பன் அவுரா பவர் மொபைல் விற்பனைக்கு அறிமுகம்

Ads
ரூ.5,990 விலையில் கார்பன் அவுரா பவர் ஸ்மார்ட் போன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அவுரா பவர் மொபைலில் 4G VoLTE மற்றும் 4000MAh பேட்டரியை பெற்றுள்ளது.

சாம்பியன் , நீலம்  மற்றும் கருப்பு என இரு வண்ணங்களில் கிடைக்கின்ற அவுரா பவர் ஸ்மார்ட்போனில் 5 இன்ச் FWVGA (480×854 pixels) ஐபிஎஸ டிஸ்பிளே திரையுடன்  ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்குதளத்துடன் 1 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸருடன் இணைந்த 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி இன்ட்ரனல் மெம்மரி மற்றும் 32 ஜிபி மைக்ரோஎஸ்டி கார்டு இணைத்து கொள்ளலாம்.

கார்பன் அவுரா பவர் ஸ்மார்ட்போனில் 8 மெகாபிக்சல் எல்இடி பிளாஷ் ரியர் கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் முன்பக்க கேமரா பெற்றுள்ளது. அதிக நிறன் வாய்ந்த 4000mAh பேட்டரி சிறப்பான பேக்கப் உடன் நாள் முழுமைக்கும் அதிக பயன்பாடுகளை பயன்படுத்தினாலும் கிடைக்கும்.

கார்பன் அவுரா பவர் நுட்ப விபரம்

  • திரை ; 5 இன்ச் FWVGA (480×854 pixels) டிஸ்பிளே 
  • இயங்குதளம் ; ஆண்ட்ராய்டு  5.1 லாலிபாப்
  • பிராசஸர் ; 1 GHz குவாட் கோர்
  • ரேம் ; 1 GB 
  • கேமரா ; 8 MP பிரைமரி கேமரா எல்இடி ஃபிளாஷ் 
  • முன்பக்க கேமரா ; 5 MP செல்ஃபீ கேமரா
  • சேமிப்பு ; 8 GB (MicroSD upto 32 GB) 
  • பேட்டரி; 4000mAh 
  • சிம் – இரு சிம் கார்டு ஸ்லாட்
  • மற்றவை ;  4G VoLTE , 3G, Bluetooth, WiFi, GPS
  • விலை ; 5,990

Comments

comments