லெனோவா பேப் 2 புரோ கூகுள் டேங்கோ ஸ்மார்ட்போன் அறிமுகம்

Ads
உலகின் முதல் கூகுள் டேங்கோ ஸ்மார்ட் போன் லெனோவா பேப் 2 புரோ ஸ்மார்ட்மொபைல் லெனோவோ டெக் வோர்ல்ட் 2016யில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மொபல்போன்களில் அடுத்த கட்ட நகர்வாக கூகுள் டேங்கோ உடன் இயங்கும் லெனோவா பேப் 2 புரோ பார்க்கப்படுகின்றது.

பேப் 2 மற்றும் பேப் ப்ளஸ் மேம்படுத்தப்பட்ட லெனோவா மாடல்களுடன் புத்தம் புதிய மாடலாக வந்துள்ள லெனோவா பேப் 2 புரோ ஸ்மார்ட்போன் அமெரிக்காவில் $499 (ரூ.33000) விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பேப் 2 விலை $199 மற்றும் பேப் ப்ளஸ் விலை $299 ஆகும்.

கூகுள் டேங்கோ என்றால் என்ன ?

3D எனப்படும் முப்பரிமாண வகையில் புகைப்படங்கள் , ஸ்டீரிட் வியூ , கேம்ஸ் , என பல நவீன அம்சங்களை பெற்ற டேப்லெட்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களை தயாரிப்பதின் நோக்கமே புராஜெக்ட் கூகுள் டேங்கோ ஆகும். விர்ச்சூவல் ரியாலட்டி (VR) மற்றும் ஆர்க்யூமென்ட் ரியாலிட்டி (AR) என சொல்லப்படுகின்ற உண்மை நிகர்நிலை அனுபவத்தினை பெறலாம். இதில் கேமராக்கள் மற்றும் சென்சார்கள் முக்கிய பங்காற்றும்.

தலைசிறந்த மொபைல் வாங்க ; Best Selling mobiles In India

லெனோவா பேப் 2 புரோ

லெனோவா பேப் 2 புரோ மொபைலில் 6.4 இன்ச் குவாட் ஹைச்டி ஐபிஎஸ் டிஸ்பிளேவுடன் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்நாப்டிராகன் 652 SoC பிராசெஸருடன் இணைந்த 4GB ரேம் பெற்று செயல்படுகின்றது. 
15 மணி நேரம் தாக்குபிடிக்க வல்ல 4000mAh பேட்டரியுடன் 16 மெகாபிக்ஸல் ரியர் கேமரா படங்களை மிக சிறப்பாக மோஷன் முறையில் இன்ஃபிராரெட் சென்ஸார் கொண்டு தெள்ள தெளிவான படங்களை வழங்கும்.  முன்பக்கத்தில் 8 மெகாபிக்ஸல் கேமரா பெற்றுள்ளது. டால்பி ஆட்டம்ஸ் 5.1 ஆடியோ பதிவுசெய்வதுடன் 3டி முறையில் ஆடியோவை ரெக்கார்டு செய்யலாம்.

மேலும் படிங்க ; மோட்டோ இசட் , மோட்டோ இசட் ஃபோர்ஸ் மற்றும் மோட்டோ மாட்ஸ் அறிமுகம்

மேலும் லெனோவா சிறப்பு டேங்கோ ஆப் ஸ்டோரினை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் வாயிலாக முதற்கட்டமாக 25 மொபைல் ஆப்ஸ் வெளியாகியுள்ளது. இந்த வருடத்தின் இறுதிக்குள் 100 ஆப்ஸ் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருகின்ற செப்டம்பர் முதல் அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட உள்ள நிலையில் உலகயளவில் இந்த வருடத்தின் இறுதியில் விற்பனைக்கு வரலாம்.

Comments

comments