லெனோவா வைப் கே5 நோட் 64 GB மெம்மரியுடன் அறிமுகம்

Ads

லெனோவா வைப் கே5 நோட் ஸ்மார்ட்போனில் கூடுதல் 64ஜிபி சேமிப்பு வசதியுடன் ரூபாய் 13,499 விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றது. 4ஜிபி ரேம் கொண்ட வைப் கே5 நோட் மொபைல் ஃபிளிப்கார்ட் வழியாக இன்று பகல் 12.01 விற்பனைக்கு கிடைக்கும்.

லெனோவா வைப் கே5

5.5 இன்ச் முழுமையான ஹெச்டி 1080p ஐபிஎஸ் டிஸ்பிளே திரையுடன் கூடிய 64 பிட் ஆக்டோகோர் 1.8 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஹீலியோ பி10 6755 பிராசஸருடன் இணைந்த 3ஜிபி ரேம் மற்றும் 4ஜிபி ரேம் ஆப்ஷன்களில் 32ஜிபி வரையில் இன்ட்ர்னல் சேமிப்பு , 4ஜிபி ரேம் 64ஜிபி இன்டரனல் சேமிப்பு மற்றும் 3 ஜிபி ரேம் 32 ஜிபி சேமிப்பு  திறனுடன் மொத்தம் 3 விதமான வகைகளில் கிடைக்கின்றது. மேலும் 128ஜிபி வரையில் மைக்ரோ எஸ்டி கார்டினை பயன்படுத்திக கொள்ளலாம்.

டால்பி டிஜிட்டலுடன் இணைந்து மிக தெளிவான ஆடியோ தரத்தை வெளிப்படுத்தும் வகையில் Wolfson WM8281 ஆடியோ கோடக் இனைந்து மிக தெளிவான ஆடியோவை வெளிப்படுத்தும்.

ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லா இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட செயல்படும் தெள்ள தெளிவான 13 மெகாபிக்சல் டியூவல் எல்இடி பிளாஷ் உடன் இணைந்த ஆட்டோஃபோகஸ் பிடிஏஎஃப் கேமரா பெற்று விளங்குகின்றது. 8 மெகாபிக்சல் 77 டிகிரி வைட் கோண வடிவில் படங்களை எடுக்க இயலும்.

தியேட்டர்மேக்ஸ் வழியாக சிறப்பான முறையில் தெளிவான படங்களை ANTVR வழியாக லெனோவா விர்ச்சூவல் ரியாலிட்டி வழியாக கானலாம். 3500mAh பேட்டரி நாள் முழுமைக்கு தாங்கும் வகையில் அமைந்துள்ளது.

லெனோவா வைப் கே5 ஸ்மார்ட்போன் விலை

  • லெனோவா வைப் K5 3GB ரேம் ; ரூ.11,999 (32GB)
  • லெனோவா வைப் K5 4GB ரேம் ; ரூ.12,499 (32GB)
  • லெனோவா வைப் K5 4GB ரேம்  ; ரூ.13,499 (64GB)

 

Comments

comments