4ஜி ஆதரவு கொண்ட லெனோவா வைப் B விற்பனைக்கு வந்தது

Ads

4ஜி ஆதரவு கொண்ட குறைந்த விலையில் லெனோவா வைப் பி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தொடக்க நிலை சந்தைக்கு ஏற்ற மாடலாக விளங்கும் லெனோவா வைப் B விலை ரூ.5799 மட்டுமே.

லெனோவா வைப் B

தொடக்க நிலை சந்தைக்கு ஏற்ற லெனோவா பி மாடல் 4ஜி எல்டிஇ ஆதரவு கொண்ட ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ 6.0 இயங்குதளத்தில் செயல்பட கூடிய குவாட்கோர் 64 பிட் மீடியாடெக் 6735m பிராசஸருடன் இணைந்த 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி உள்ளடங்கிய சேமிப்பினை பெற்று விளங்குகின்றது. மேலும் மைக்ரோ எஸ்டிகார்டு வழியாக 32 ஜிபிவரை மெமரி அதிகரிக்கலாம்.

சிங்கிள் எல்இடி ஃபிளாஷ் ஆப்ஷனுடன் விளங்குகின்ற பிரைமரி கேமரா 5 மெகாபிக்சலை பெற்றுள்ளது. செல்ஃபி படங்களுக்கு ஏற்ற வகையில் 2 மெகாபிக்சல் கேமாரா உள்ளது.

அதிகார்வப்பூர்வமாக இதுவரை அறிவிக்கப்படாமல் உள்ள லெனோவா வைப் B  விலை ரூ. 5,799 என மகேஸ் டெலிகாம் தெரிவித்துள்ளது.

லெனோவா வைப் B நுட்ப விபரம்
  • திரை: 4.5 அங்குல FWVGA  திரையுடன் தரத்துடன் 480 x 854 பிக்சல் தீர்மானம்
  • பிரைமரி கேமரா: 5 MP பிரைமரி கேமரா ஃபிக்சஸ்டு ஃபோகஸ் வசதியுடன் எல்ஈடி ஃபிளாஷ் பெற்றுள்ளது.
  • செல்ஃபீ கேமரா: 2 MP பிரைமரி கேமரா பெற்றுள்ளது.
  • Storage & RAM:  1GB ரேம் உள்ள மாடலில் 8 ஜிபி இன்டர்னல் மெமரி பெற்றுள்ளது. கூடுதல் சேமிப்புக்கு மைக்ரோ எஸ்டிகார்டு வழியாக 32 ஜிபிவரை மெமரி அதிகரிக்கலாம்.
  • பிராசஸர்: குவாட்கோர் 64-bit மீடியாடெக் 6735m  பிராசஸர் பெற்றுள்ளது.
  • ஒஎஸ்: மார்ஷ்மெல்லோ 6.0
  • அலைவரிசை: டுயல் சிம் & 4G VoLTE
  • பேட்டரி: 2500 mAh
  • ஆதரவு: ப்ளூடூத் 4.0 , மைக்ரோ USB போர்ட் மற்றும் Wifi b/g/n
  • ப்ரி லோடேட் – ஸ்கைப், டிவிட்டர், எவர்நோட், UC பிரவுசர் மேலும் பல

Comments

comments