மூன்றாவது முறையாக எல்ஜி ஜி6 ஸ்மார்ட்போன் விலை குறைந்தது

Ads

இந்திய சந்தையில் தொடர்ந்து மூன்றாவது முறையாக எல்ஜி ஜி6 ஸ்மார்ட்போன் விலை குறைக்கப்பட்டு ரூ.37,990 விலையில் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது.

எல்ஜி ஜி6 ஸ்மார்ட்போன்

முதல்முறையாக 2017 மொபைல் வோர்ல்டு காங்கிரஸ் அரங்கில் அறிமுகம் செய்யப்பட்ட எல்ஜி G6 மொபைல் பல்வேறு விதமான வசதிகளை கொண்டதாக விளங்குகின்றது.

5.7  அங்குல QHD திரையுடன் வந்துள்ள இந்த கருவியில் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 821 Soc பிராசஸருடன் இணைந்த 4GB ரேம் உடன் இணைந்த 32GB மற்றும் 64GB வரையிலான உள்ளடங்கிய சேமிப்பை பெற்று விளங்குகின்றது.

இரட்டை கேமராக்கள் 13 மெகாபிக்சலுடன் அமைந்து சிறப்பான படங்கள் மற்றும் உயர்தர 4கே ஹெச்டி வீடியோக்களை தரும் வகையில் அமைந்துள்ளது. முன்புறத்தில் 5 மெகாபிக்சல் கேமரா அமைந்துள்ளது. OIS எனப்படும் சிறந்த படங்களை தர உதவும் அமைப்பும் பெற்று விளங்குகின்றது.

வாட்டர் ப்ரூஃப் , தூசியிலிருந்து பாதுகாக்கும் ரெசிஸ்டென்ட் , கைரேகை ஸ்கேனர் , ஆண்ட்ராய்டு 7.1 நெளகட் இயங்குதளத்தில் செயல்படுகின்ற எல்ஜி ஜி6 ஸ்மார்ட்போனில் Wi-Fi 802.11/b/g/n/ac, பூளூடுத் 4.2, ஜிபிஎஸ், 4G LTE, VoLTE, USB Type-C 2.0 மற்றும் என்எஃப்சி போன்றவை இடபெற்றுள்ளது.

ஆரம்பத்தில் எல்ஜி G6 மொபைல் ரூ.51,990 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு ரூ.13,000 வரை சில மாதங்களுக்கு பிறகு ரூ.38,990 விலையில் கிடைக்க தொடங்கிய நிலையில் மீண்டும் ரூ.1000 வரை குறைக்கப்பட்ட நிலையில் ரூ.37,990 விலையில் தற்போது கிடைக்க தொடங்கியுள்ளது.

Comments

comments