ரூ. 16,999-க்கு சியோமி Mi மேக்ஸ் 2 மொபைல் வெளியானது!

Ads

புதிய சியோமி Mi மேக்ஸ் 2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.16,999 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜூலை 27 முதல் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் கிடைக்கும்.

Mi மேக்ஸ் 2

மிக சிறப்பான 5300mAh பேட்டரி திறனுடன் கூடிய இந்த மொபைலில் பல்வேறு சிறப்பு வசதிகளுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முழுமையான விபரங்களை பின்வருமாறு காணலாம்

டிஸ்பிளே & டிசைன்

6.44 அங்குல அகலமான டிஸ்பிளே வசதியுடன் கூடிய சியோமி Mi மேக்ஸ் 2 ஸ்மார்ட்போனில் 1080×1920 பிக்சல் தீர்மானத்தை கொண்டு மிக நேர்த்தியான மெட்டல் பாடியுடன் வடிவமைக்கப்பட்டு அசத்தலாக விளங்குகின்றது.

பிராசஸர் & ரேம்

ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 பிராசஸர் கொண்டு செயல்படுகின்ற ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் 64ஜிபி உள்ளடங்கிய சேமிப்பை பெற்றதாக கிடைக்கின்றது.கூடுதலாக 128ஜிபி மைக்ரோ எஸ்டி வழியாக அதிகரிக்கலாம்.

கேமரா

Mi மேக்ஸ் 2 ஸ்மார்ட்போனில் உயர்தர படங்கள் மற்றும் வீடியோ பெறும் வகையில் பின்புறத்தில் சோனி IMX386 சென்சார் உடன்1.25 மைக்ரான் பிக்சல் மற்றும் PDAF ஆதரவுடன் கூடிய இரட்டை எல்இடி ஃபிளாஷ் பெற்ற 12 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

ப்யூட்டிஃபிகேஷன் மோட் வசதியுடன் கூடிய செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளை எதிர்கொள்ள முன்புறத்தில் 5 மெகாபிக்சல் கேமரா இடம்பெற்றுள்ளது.

பேட்டரி

குவால்காம் க்விக் சார்ஜ் 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷனுடன் கூடிய 5300mAh பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்ற மொபைல் அதிகபட்சமாக 68 சதவிகித சார்ஜிங் பெற ஒரு மணி நேரம் மட்டுமே போதும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டு நாட்கள் வரை பேட்டரி தாங்கும் திறனை கொண்டதாக அமைந்துள்ளது.

மற்றவை

ஆண்ட்ராய்டு 7.1 இயங்குதளத்தை பின்னணியில் வடிவமைக்கப்பட்ட MIUI 8 இயங்குதளத்தில் செயல்படுகின்ற மேக்ஸ் 2 கைப்பேசியில் துனை விருப்பங்களாக ஸ்டீரியோ ஸ்பீக்கர்,ஐஆர் பிளாஸ்டர்,  4G எல்டிஇ, VoLTE, Wi-Fi 802.11/b/g/n, புளூடூத், ஜிபிஎஸ், மற்றும் யூஎஸ்பி டைப் போர்ட் சி ஆகியவை இடம்பெற்றுள்ளது.

விலை விபரம்

இந்தியாவில் ரூ.16,999 விலையில் சியோமி  எம்ஐ மேக்ஸ் 2 மொபைல் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 27ந் தேதி முதல் காலை 10 மணிக்கு ஃபிளிப்கார்ட் அமேசான், பேடிஎம் மற்றும் டாடா க்ளிக் தளம் உள்பட முன்னணி பூர்வீகா, சங்கீதா, பிக்சி ரீடெயில்களிடமும் கிடைக்கும்.

ஜியோ பயனாளர்களுக்கு 100ஜிபி கூடுதல் டேட்டா சலுகை வழங்கப்படுகின்றது.

சியோமி மீ மேக்ஸ் 2 நுட்ப விபரம்
வசதிகள் சியோமி மீ மேக்ஸ் 2
டிஸ்பிளே 6.44 இன்ச் ஹெச்டி
பிராசஸர் குவால்காம் 625 SoC
ரேம் 4GB
சேமிப்பு 64GB
பின் கேமரா 12MP
முன் கேமரா 5MP
ஓஎஸ் ஆண்ட்ராய்டு 7.0 அடிப்படை MIUI 8
பேட்டரி 5300mAh
ஆதரவு இருசிம், 4G VoLTE, புளூடுத், ஜிபிஎஸ், வை-ஃபை
விலை ரூ. 16,999

Comments

comments