சியோமி மி மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்

Ads

சீனா சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள பெசல்-லெஸ் வகையை பெற்ற ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் கொண்டு இயக்கப்படுகின்ற சியோமி மி மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன் RMB 3,299 (Rs 32,400) ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டுள்ளது.

சியோமி மி மிக்ஸ் 2

பெசல்-லெஸ் குறைவான 5.99 அங்குல திரையை பெற்றுள்ள இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் பெற்ற மாடலில் அதிகபட்சமாக 256ஜிபி வரை உள்ளடக்க சேமிப்பை பெற்றிருப்பதுடன், சிறப்பு செராமிக் எடிசன் மாடலில் 8ஜிபி ரேம் இடம்பெற்றுள்ளது.

டிசைன் & டிஸ்பிளே

கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய நிறுவனங்களுடன் கிடைக்க உள்ள மி மிக்ஸ் 2 மொபைல்போனில் 5.99 அங்குல முழு ஹெச்டி திரையுடன் 2160×1080 பிகசல் தீர்மானத்துடன் கூடியதாக கிடைக்கின்றது. மேலும் சிறப்பு எடிசன் மாடலாக செராமிக் மாடலில் பின்புற கேமராவில் 18 காரட் கோல்டு ரிங் இடம்பெற்றுள்ளது.

பிராசஸர் & ரேம்

Mi மிக்ஸ் 2 ஆஃமார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் பிராசஆருடன் 6ஜிபி ரேம் அடிப்படையாக பெற்றுள்ள நிலையில் 64GB, 128GB மற்றும் 256GB ஆகிய மூன்று உள்ளடக்கிய சேமிப்பு பெற்றதாக வந்துள்ளது. மேலும் மி மிக்ஸ் 2 செராமிக் எடிசன் மாடலில் 8ஜிபி ரேம் கொண்டு 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டிருக்கின்றது.

கேமரா துறை

இந்த மொபைலில் 4-axis OIS, f/2.0, 5P லென்ஸ், PDAF, மற்றும் HDR ஆகியவற்றை பெற்ற 12 மெகாபிக்சல் சென்சார் கேமரா பெற்றுள்ளது. முன்புறத்தில் செல்பி மற்றும் 1080p வீடியோ அழைப்புகளை எதிர்கொள்ள 5 மெகாபிக்சல் சென்சார் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரி

3400mAh பேட்டரி கொண்ட மாடலாக மி மிக்ஸ் 2 வெளியாகி உள்ளது.

மற்றவை

4G LTE, வை-ஃபை 802.11ac, GPS/ A-GPS, புளூடூத் v5.0, மற்றும் யூஎஸ்பி Type-C ஆகியவற்றை துனை விருப்பங்களாக பெற்றுள்ளது.

விலை

சியோமி மி மிக்ஸ் 2 6ஜிபி/64ஜிபி – CNY 3,299 (Rs.32,300)

சியோமி மி மிக்ஸ் 2 6ஜிபி/128ஜிபி – CNY 3,599 (Rs.35,300)

சியோமி மி மிக்ஸ் 2 6ஜிபி/256ஜிபி – CNY 3,999 (Rs.39,200)

சியோமி மி மிக்ஸ் 2 செராமிக் எடிசன் 8ஜிபி/128ஜிபி – CNY 4,699 (Rs.46,000)

இந்தியா சந்தையில் மி மிக்ஸ் 2 விற்பனைக்கு வருவதனை சியோமி இந்தியா நிர்வாக இயக்குநர் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகார்வப்பூர்வமாக பதிவிட்டுள்ளார்.

Comments

comments