ஆண்ட்ராய்டு மொபைலில் ஹம்மிங்பேட் மால்வேர் நீக்குவது எவ்வாறு ?

Ads
10 மில்லியனுக்கு மேற்பட்ட ஆண்ட்ராய்டு மொபைல்களில் ஹம்மிங்பேட்  ( Hummingbad Malware ) என்ற பெயரிலான மால்வேர் தாக்குதல் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆசியாவில் அதிகமாகவும் இந்தியாவில் 1.35 மில்லியன் மொபைல்கள் மால்வேரால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

செக்பாயின்ட்  சைபர் செக்யூரிட்டி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் வாயிலாக ஹம்மிங்பேட் மால்வேர் என்னவிதமான தாக்குதலை ஏற்படுத்துகின்றது போன்ற விபரங்களை வெளியிட்டுள்ளது.

ஹம்மிங்பேட் மால்வேர் யாருடையது ?

செக்பாயின்ட்  சைபர் செக்யூரிட்டி வெளியிட்டுள்ள தகவலின்படி ‘யிங்மொப்  சட்டப்பூர்வமாக இயங்கும்  சீன விளம்பர பகுப்பாய்வு  நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் 25 நபர்கள் பணியாற்றுகின்றனர். மேலும் இதில் உள்ள 4 நபர்கள் ஹம்மிங்பேட் மால்வேர தயாரிக்கவே செயல்பட்டு வருகின்றனராம்.

யிங்மொப் மால்வேர் வழியாக மாதம் $300 ,000 வருமானத்தை ஈட்டு வருகின்றதாம். மேலும் இந்த மால்வேர் 10 மில்லியன் மொபைல்களில் உள்ள தனிநபர் தகவல்களையும் திருடியிருக்கலாம் என தெரிவிக்கின்றது.

ஹம்மிங்பேட் மால்வேர் என்ன செய்யும் ?

ஹம்மிங்பேட் மால்வேர் ரூட்டிங்கிட் போல செயல்பட்டு ஆண்ட்ராய்டு மொபைல்களில் தேவையற்ற ஆப்ஸ் மற்றும் விளம்பர கிளிக்குகளை செய்து விளம்பர வருமானத்தை பெறும் வகையிலான  மால்வேர் ஆகும். இணையதளங்களில் உலாவும்பொழுது தானாகவே மால்வேர் இன்ஸ்டால் ஆகிவிடும்.அதன் பின்  மொபைலை ரூட்டிங் செய்து அதற்கு தேவையான ஆப்ஸ்களை இன்ஸ்டால் செய்துகொள்ளும்.

உங்களுக்கே தெரியாமல் உங்களுடைய மொபைலில் தேவையற்ற ஆப்ஸ் மற்றும் விளம்பர கிளிக்குளை செய்ய வல்லதாகும்.

ஹம்மிங்பேட் மால்வேரை கண்டுபிடிக்க வழி என்ன ?

உங்கள் மொபைலில் ஹம்மிங்பேட் மால்வேர் பாதிப்பு உள்ளதா என கண்டறிய செக்பாயின்ட்யின்  ஜூன்ஆலாரம் , ஏவிஜி மற்றும் அவாஸ்ட் போன்ற ஆண்டிவைரஸ் ஆப்ஸ் பயன்படுத்தி சோதனை செய்யுங்கள்.
ஹம்மிங்பேட் உள்ளதா ?

ஹம்மிங்பேட் மால்வேர் உறுதியாகிவிட்டால் உடனடியாக உங்களுடைய முக்கிய தகவலை சேமித்துக்கொள்ளுங்கள். ஆண்டிவைரஸ் மால்வேரை நீக்காது என்பதனால் உடனடியாக உங்களுடைய மொபைலை ஃபேக்டரி ரீசெட் (factory reset) செய்து கொள்ளுங்கள்.
மால்வேரே தடுக்க அதிகார்வப்பூர்வமற்ற ஆப்ஸ்களை தவிர்த்துவிடுங்கள். மேலும் கூகுள் பிளே ஸ்டோர் வாயிலாக தரவிற்க்கும் செய்யும் ஆப்ஸ்களை முழுமையான தகவல் உள்ளதா என சோதனை செய்து டவுன்லோட் செய்யுங்கள்.


Amazon.in 48 HOUR SALE OFFERS:

  • Up to 40% OFF on ELECTRONICS
  • Up to 70% OFF on FASHION END OF SEASON SALE
  • Up to 60% OFF on BOOKS & ENTERTAINMENT with a minimum 50% OFF on TOP 25 books.
  • Up to 60% OFF on HOME & KITCHEN . 
  • Up to 60% OFF on TOYS, HOUSEHOLD ITEMS & PERSONAL CARE .
Shop Now…More details  click below this image 

recharge

Comments

comments