சியோமி ரெட்மி 4A விற்பனைக்கு வந்தது #Redmi4A

Ads

ரூ.5999 விலையில் சியோமி ரெட்மி 4A  பட்ஜெட் ரக மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரெட்மி 4A அமேசான் மற்றும் எம்ஐ தளத்தில் வியாழன் முதல் விற்பனைக்கு கிடைக்கும்

ரெட்மி 4A

ரெட்மி 4A  மொபைலின் 5 அங்குல HD (720×1280 பிக்சல் தீர்மானத்துடன் 1.4GHz  க்வாட்கோர் ஸ்னாப்டிராகன் 425 SoC பெற்று 2GB ரேம் உடன் இணைந்து செயல்படுகின்ற ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லா 6.0 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட MIUI 8  தளத்தை பெற்றுள்ளது.

கேமரா

13 மெகாபிக்சல் பின்புற கேமராவுடன்  செயல்படுகின்ற 5 மெகாபிக்சல் கேமராவினை முன்பக்கத்தில் பெற்றுள்ளது. 16GB உள்ளடங்கிய மெமரி உடன் கூடுதலாக மெமரியை அதிகரிக்க 256GB மைக்ரோ எஸ்டி அட்டையுடன் கிடைக்கின்றது.

பேட்டரி

3120mAh திறன் கொண்ட பேட்டரி ஆப்ஷனுடன் விளங்குகின்றது. ரெட்மி 4A மொபைல்களில் கூடுதல் வசதிகளாக  Wi-Fi, ஜிபிஎஸ், ப்ளூடூத், 3.5மிமீ ஆடியோ ஜாக், FM ரேடியோ. ஜிஎஸ்எம், 3ஜி, 4ஜி எல்டிஇ , VoLTE மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி ஆகியவை வழங்குகிறது.

விலை

ரூ.5999 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள சியோமி ரெட்மி 4A  வியாழன் அன்று எம்ஐ.காம் மற்றும் அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கும்.

Comments

comments