ஆப்பிள் ஐபோன் 8 , ஐபோன் 8 பிளஸ் & ஐபோன் 10 – இந்தியா வருகை & விலை பட்டியல்

Ads

டெக் உலகில் பரபரப்பான இந்த வருடம் ஆப்பிள் அறிமுகம் செய்த 10வது ஆண்டு விழா ஆப்பிள் ஐபோன் X, ஐபோன் 8 , ஐபோன் 8 பிளஸ் மொபைல்களின் இந்தியா வருகை மற்றும் விலை பட்டியல் விபரத்தை காணலாம்.

ஆப்பிள் ஐபோன் 8 முன்பதிவு விபரம்

சர்வதேச அளவில் 12ந் தேதி வெளியிடப்பட்ட ஆப்பிள் ஐபோன் 8 , ஐபோன் 8 பிளஸ் மற்றும் ஆப்பிள் ஐபோன் 10 ஆகிய மாடல்களில் முதற்கட்டமாக ஐபோன் 8 வரிசை நாளை முதல் அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளில் முன்பதிவு தொடங்கப்பட உள்ளது.

பல்வேறு வசதிகளுடன் வந்துள்ள ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 ப்ளஸ் ஆகிய மொபைல்களில் ஏ11 பயோனிக் பிராசெஸர் பெற்று முந்தைய ஏ10 சிப்செட் உடன் ஒப்பீடுகையில் 70 சதவீத கூடுதல் பெர்ஃபாமென்ஸ் கொண்டதாக வந்துள்ளது.

ஐபோன் 8 பிளஸ் கருவியில் ரியர் கேமரா இரு 12 மெகாபிக்சல் சென்சார் கேமரா ஆப்ஷனை கொண்டதாக வந்துள்ளமது. முன்புறத்தில் 7 மெகாபிக்சல் சென்சார் செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 4.7 அங்குல ஐபோன் 8 கருவியில் பின்புறத்தில் 12 மெகாபிக்சல் மட்டுமே பெற்றுள்ளது.

சிறப்பான பேட்டரி பெர்ஃபாமென்ஸ், ஆப்பிள் சிறி வாய்ஸ் அசிஸ்டென்ஸ், அனிமோஜி, ஃபேஸ் ஐடி , இரட்டை கேமரா செட்டப், ஐஓஎஸ் 11 இயங்குதளம் என பல்வேறு அம்சங்களை பெற்ற ஆப்பிள் ஐபோன் 10 மாடல் 10வது ஐபோன் ஆண்டுவிழாவை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் ஆகிய கருவிகளுக்கு செப்டம்பர் 22ந் தேதி முதல் முன்பதிவு செய்யப்படலாம் என ஆப்பிள் இந்தியா விநியோகஸ்தர் குறிப்பிட்டுள்ளார்.

ஆப்பிள் ஐபோன் 8 விலை பட்டியல்

ஆப்பிள் ஐபோன் 8 64GB -ரூ.64,000

ஆப்பிள் ஐபோன் 8 256GB – ரூ.77,000

ஆப்பிள் ஐபோன் 8 பிளஸ் விலை

ஆப்பிள் ஐபோன் 8 ப்ளஸ் 64GB – ரூ.73,000

ஆப்பிள் ஐபோன் 8 ப்ளஸ் 256GB – ரூ.86,000

ஆப்பிள் ஐபோன் 10 மாடல் அக்டோபர் மாதம் முன்பதிவு தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் இந்தியாவில் நவம்பர் மாத மத்தியில் விற்பனைக்கு கிடைக்கப்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆப்பிள் ஐபோன் 10 விலை பட்டியல்

ஆப்பிள் ஐபோன் 10 64GB – ரூ.89,000

ஆப்பிள் ஐபோன் 10 256GB – ரூ.1,02,000

Comments

comments