ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு 778 கோடி ரூபாய் அபராதம்…! ஏன் ?

Ads

தவறான தகவலை வெளியிட்ட காரணத்தால் இந்திய மதிப்பில் ரூ..778 கோடி அபராதம் செலுத்த ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு ஐரோப்பா ஒன்றியம் உத்தரவிட்டுள்ளது.

ஃபேஸ்புக் அபராதம்

கடந்த 2014-ல் வாட்ஸ்அப் செயலியை கையகப்படுத்தும் பொழுது தவறான தகவலை வழங்கிய குற்றத்துக்கு ஃபேஸ்புக்கிற்கு €110 million ($122.4 million) அதாவது இந்திய மதிப்பில் ரூ.778 கோடி ரூபாய் அபராதமாக விதிக்க ஐரோப்பா ஒன்றியம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கு ஃபேஸ்புக் நிறுவனம் தரப்பில் கூறப்பட்ட விளக்கத்தில், அதில் சில தவறுகள் ஏற்பட்டது உண்மைதான், ஆனால் அவை தெரியாமல் நடந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அபராத தொகையில் எந்த மாற்றங்களும் இல்லை எனவும், விதிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு இது ஒரு முன்மாதிரியாக இருக்கும் என ஐரோப்பிய யூனியன் கருத்து தெரிவித்துள்ளது.

Comments

comments