இந்தியாவில் நோக்கியா 3310 விரைவில் அறிமுகம்

Ads

சர்வதேச அளவில் 120 நாடுகளில் ஏப்ரல் மாத இறுதிக்குள் நோக்கியா 3310 மொபைல் முதற்கட்டமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதனை தொடர்ந்து நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 மொபைல்கள் மே மாதம் விற்பனைக்கு செல்ல உள்ளது.

நோக்கியா3310 மொபைல்

  •  ரூ. 3500 விலையில் நோக்கியா3310 மொபைல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்.
  • புதிய பொலிவுடன் 17 ஆண்டுகளுக்கு பிறகு 3310 செங்கல் செட் வந்துள்ளது.
  • புதிய மாடலில் கேமரா மெமரி கார்டு போன்ற அம்சங்களை பெற்றுள்ளது.

சமீபத்தில் வெளிவந்துள்ள செய்தின் அடிப்பைடையில் நோக்கியா3310 மொபைல் முதல் மாடலாக சர்வதேச அளவில் பல நாடுகளில் ஏப்ரல் இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம் என உறுதியாகியுள்ளது. இந்த மொபைலை தொடர்ந்தே மற்ற ஸ்மார்ட்போன் மாடல்களான நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 போன்றவை விற்பனைக்கு வரும் என்பதனால் இந்த மாத இறுதியில் இந்தியாவிலும் 3310 கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பழைய தோற்ற அமைப்பிலே நவீன அம்சங்களுக்கு ஏற்ற ஸ்டைலை புகுத்தி அறிமுகம் செய்யப்பட்டுள்ள  புதிய நோக்கியா 3310 மொபைலில்  84 × 48 pixel மோனோக்ரோம் டிஸ்பிளேவுடன் முந்தைய மாடலின் அதே தாத்பரியங்களை கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளது.

நோக்கியா3310 வசதிகள்

  • புஸ் பொத்தான் ஐகானிக் வடிவத்தில்
  • 2 MP கேமரா எல்இடி ஃபிளாஷ்
  • ஹெட்போன் ஜேக்
  • 2.4” வளைந்த லேயர் கொடுக்கப்பட்டுள்ளதால் சூரிய ஒளியிலும் பார்க்க இயலும்
  • இரு சிம் கார்டு ஆப்ஷன்
  • 2ஜி அலைவரிசை  (GSM 900/1800 MHz)
  • புதிய UI நோட்ஸ்
  • 22 மணி நேரம் பேசும் திறன் கொண்ட அட்டகாசமான பேட்டரி
  • பன்பலை ரேடியோ மற்றும் MP3 பிளேயர்
  • 16 MB சேமிப்பு மற்றும் கூடுதலாக மைக்ரோ எஸ்டி வழியாக 32 GB வரை அதிகரிக்கலாம்
  • மைக்ரோ யூஎஸ்பி சார்ஜர்
  • புளூடூத் 3.0
  • நிறங்கள் சிவப்பு , மஞ்சள் ,நீலம் உள்பட கிரே

Comments

comments