நோக்கியா D1C ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் விலை எவ்வளவு ?

Ads

விரைவில் நோக்கியா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ள நோக்கியா D1C ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் விலை மலிவாக ரூ.10,000 விலைக்குள் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஒருகாலத்தில் மொபைல் சந்தையில் கொடிகட்டி பறந்த நோக்கியா ஸ்மார்ட்போன் வரவுக்கு பின்னர் தொலைந்த தனது வரலாற்றை ஆண்ட்ராய்ட் வாயிலாக புதுப்பிக்கும் நோக்கில் மிக தீவரமாக களமிறங்கி செயல்பட்டு வருகின்றது. நோக்கியா டி1சி என்ற பெயரில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன் 5.5 இன்ச் டிஸ்பிளேவினை பெற்றிருக்கும்.

நோக்கியா D1C நுட்பவிபரம்

நோக்கியா பவர் யூஸர் வெளியிட்டுள்ள தகவலின் வாயிலாக புதிய நோக்கியா D1C மொபைலில் இருவிதமான வகையில் அமைந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா டி1சி பேஸ் மாடல் 

  • 1.4 GHz Snapdragon 430 Processor
  • Adreno 505 GPU
  • 2  GB RAM
  • ஆண்ட்ராய்ட் நௌகட் 7.0
  • 5 இன்ச் 1080p display
  • 16 GB internal storage
  • 13 MP பின்புற கேமரா
  • 8 MP முன்பக்க கேமரா
  • விலை – ரூ.10,000

நோக்கியா டி1சி டாப் மாடல் 

  • 1.4 GHz Snapdragon 430 Processor
  • Adreno 505 GPU
  • 3 GB RAM
  • ஆண்ட்ராய்ட் நௌகட் 7.0
  • 5.5 இன்ச் 1080p display
  • 16 GB internal storage
  • 16 MP பின்புற கேமரா
  • 8 MP முன்பக்க கேமரா
  • விலை – ரூ.15,000

வருகின்ற பிப்ரவரி 27 , 2017 முதல் மார்ச் 2 ,2017 வரை நடைபெற உள்ள மொபைல் வோல்டு காங்கிரஸ் 2017 அரங்கில் முதன்முறையாக நோக்கியா மொபைல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. நோக்கியா மொபைல்கள் ஆண்ட்ராய்டு தளத்தில் பட்டைய கிளப்புமா ? உங்கள் கருத்து என்ன ?

Comments

comments