இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி நோட் 8 முன்பதிவு தொடங்கியது

இந்தியாவில் ரூ.65,000 ஆரம்ப விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படும் சாம்சங் கேலக்ஸி நோட் 8 மொபைலுக்கு முன்பதிவு தொடங்கியுள்ளது.

Ads

சாம்சங் நிறுவனத்தின் புதிய ஃபிளாக் ஷீப் கில்லர் மாடலாக வெளிவந்துள்ள சாம்சங் கேலக்ஸி நோட் 8 இந்தியாவில் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதால் விரைவில் விற்பனைக்கு வெளியாக உள்ளது.

சாம்சங் கேலக்ஸி நோட் 8 முன்பதிவு

கடந்த ஆகஸ்ட் 24ந் தேதி சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி நோட் 8 மாடலுக்கு பல்வேறு நாடுகளில் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ள நிலையில் இந்திய சந்தையிலும் தற்போது முன்பதிவு தொடங்கபட்டுள்ளது.

ரூ. 69,000 ஆரம்ப விலையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற கேலக்சி நோட் 8 64GB மாடல் தவிர 128GB மாடல் ரூ. 74,000 விலையில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற செப்டம்பர் 25ந் தேதி முதல் டெலிவரி தொடங்கப்படலாம்.இதுதவிர, 256GB சேமிப்பு பெற்ற மாடல் இந்தியாவில் தாமதமாக வெளியிடப்படலாம்.

சாம்சங் கேலக்சி நோட் 8 நுட்ப விபரம்

6.3 அங்குல QHD இன்ஃபினிட்டி டிஸ்பிளே பெற்றதாக 2960×1440  பிக்சல் தீர்மானத்துடன் சூப்பர் AMOLED வளைந்த கிளாசினை பெற்றதாக கிடைக்கின்ற கேலக்சி நோட் 8 மொபைலில் கருப்பு, நீலம், கிரே மற்றும் கோல்டு ஆகிய நிறங்களுடன் 64 பிட் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 Soc சிப்செட் அல்லது Exynos 8895 சிப்செட் பெற்றதாக 6ஜிபி ரேம் கொண்டு இயக்கப்படுகின்ற 64GB உள்ளடங்கிய சேமிப்பு தவிர 128GB மற்றும் 256GB என மொத்தம் மூன்று விதமான வேரியன்ட்களில் கிடைக்க உள்ளது.

இரு கேமரா செட்டப் பிரிவுடன் ஒன்று 12 மெகாபிக்சல் f/1.7 பெற்றதாகவும், மற்றொன்று 12 மெகாபிக்சல் டெலிபோட்டோ லென்ஸ் கேமராவில் f/2.4 போன்றவற்றுடன் இரு கேமராக்களும் 2X ஆப்டிக்கல் ஜூம் மற்றும் 10X டிஜிட்டல் ஜூம் ஆகியவற்றை பெற்றுள்ளது. முன்புறத்தில் செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளை பெறுவதற்கு 8 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

 

ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் நுட்பத்தினை பெற்றதாக வந்துள்ள கேலக்ஸி நோட் 8 மொபைலில் 3,300mAh பேட்டரியுடன ஆண்ட்ராய்டு நௌகட் 7.1.1 இயங்குதளத்தை பெற்றதாக வந்துள்ள புளூடூத் v5.0, USB Type-C, NFC, GPS மற்றும் Wi-Fi ஆகியவற்றுடன் பிக்ஸ்பி, தூசு மற்றும் நீர்புகா பாதுகாப்பு தன்மையை பெற்றுள்ளது.

எதிர்பார்க்கும் விலை

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி நோட் 8 விலை ரூ. 69,000 க்கு தொடங்கலாம்.

Comments

comments