இன்று 12 மணிக்கு ரெட்மி நோட் 4 விற்பனைக்கு கிடைக்கும்..!

Ads

சியோமி நிறுவனத்தின் மிகவும் பிரசத்தி பெற்ற மாடல்களில் ஒன்றான ரெட்மி நோட் 4 மூன்று வகையான பிரிவுகளில்வ இன்று நன்பகல் 12 மணிக்கு எம்ஐ.காம் மற்றும் ஃபிளிப்கார்ட் வாயிலாக விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

ரெட்மி நோட் 4 விற்பனை விபரம்

எத்தனை அலகுகள் விற்பனை செய்யப்படும் போன்ற விபரங்கள் வெளியிடப்படாத நிலையில் ரெட்மி நோட் 4 மொபைலில் மார்ஷ்மெல்லா 6.0 இயங்குதளத்தினை அடிப்படையாக கொண்ட MIUI 8 இயங்குதளத்தில் செயல்படுகின்றது.  5.5 இன்ச் முழு ஹெச்டி திடையுடன்  (1080p) 2.5 D கிளாஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஸ்னாப்டிராகன் குவால்காம் 625 சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது.

உயர்தரமான படங்களை வெளிப்படுத்தும் 13 மெகாபிக்சல் ரியர் கேமராவில் CMOS சென்சார் எல்இடி பிளாஷ் ,  f/2.0 அப்ரேச்சர் , PDAF ஆதரவுடன் விளங்கும். முன்பக்க கேமரா 5 மெகாபிக்சல்  கேமராவிலும் CMOS சென்சாரை பெற்றுள்ளது.

ரெட்மி நோட் 4 விலை பட்டிய

2GB/ 32GB- Rs 9,999
3GB/32GB- Rs 10,999
4GB/64GB- Rs 12,999

கோல்டு ,கிரே சில்வர் மற்றும் புதிய கருப்பு என மூன்று விதமான வண்ணங்களில் கிடைக்க உள்ளது.

Comments

comments