45 நாட்களில் 1 மில்லியன் ரெட்மி நோட் 4 விற்பனை சாதனை

Ads

கடந்த ஜனவரி 23,2017-ல் விற்பனைக்கு வந்த ரெட்மி நோட் 4  மொபைல் 45 நாட்களில் 10 லட்சம் என்ற விற்பனை இலக்கினை கடந்து இந்தியாவில் மிக வேகமாக விற்பனை ஆகின்ற மாடல் என்ற பெருமையை ரெட்மி நோட் 4  பெற்றுள்ளது.

ரெட்மி நோட் 4  மொபைல்

  • 45 நாட்களில் 1 மில்லியன் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
  • மூன்று விதமான வேரியன்டில் கிடைக்கின்ற இந்த மொபைலின் ஆரம்ப விலை ரூ.9999 மட்டுமே
  • கோல்டு ,கிரே சில்வர் மற்றும் மேட் பிளாக் என 4 வநிறங்களில் கிடைக்கின்றது.

மார்ஷ்மெல்லா 6.0 இயங்குதளத்தினை அடிப்படையாக கொண்ட MIUI 8 இயங்குதளத்தில் செயல்படுகின்றது.  5.5 இன்ச் முழு ஹெச்டி திடையுடன்  (1080p) 2.5 D கிளாஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஸ்னாப்டிராகன் குவால்காம் 625 சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கேமரா வசதி

உயர்தரமான படங்களை வெளிப்படுத்தும் 13 மெகாபிக்சல் ரியர் கேமராவில் CMOS சென்சார் எல்இடி பிளாஷ் ,  f/2.0 அப்ரேச்சர் , PDAF ஆதரவுடன் விளங்கும். முன்பக்க கேமரா 5 மெகாபிக்சல்  கேமராவிலும் CMOS சென்சாரை பெற்றுள்ளது.

ரெட்மி நோட் 4 விலை பட்டியல்

2GB/ 32GB- Rs 9,999
3GB/32GB- Rs 10,999
4GB/64GB- Rs 12,999

கோல்டு ,கிரே சில்வர் மற்றும் புதிய கருப்பு என 4 வண்ணங்களில் கிடைக்கின்ற சியோமி ரெட்மி நோட் 4 கருவி  ஃபிளிப்கார்ட் மற்றும் எம்ஐ தளத்தின் வாயிலாக விற்பனை செய்யப்பட உள்ளது.

 

 

Comments

comments