அட்டகாசமான நோக்கியா 3310 மொபைல் மீண்டும் அறிமுகம் – MWC17

Ads

கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்னதாக ஃப்யூச்சர் மொபைல்களில் ஆதிக்கம் செலுத்தி வந்த நோக்கியா 3310 மொபைல் ரூ.3500 விலையில் மீண்டும் ஒரு மாதம் வரை தாக்கு பிடிக்க வகையிலான பேட்டரியுடன் ஸ்னேக் மற்றும் பாரீஸ் கேம்ஸ்களுடன் நோக்கியா 3310 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 

நோக்கியா 3310

இந்தியாவில் 2017 ஆம் ஆண்டின் இரண்டாவது காலண்டில் விற்பனைக்கு வரவுள்ள புதிய நோக்கியா3310 மொபைல் தவிர நோக்கியா 6 ,நோக்கியா 3 மற்று நோக்கியா 5 போன்ற மொபைல்கள் பார்சிலோனாவில் மொபைல் வோர்ல்ட் காங்கிரஸ் 2017ல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பழைய தோற்ற அமைப்பிலே நவீன அம்சங்களுக்கு ஏற்ற ஸ்டைலை புகுத்தி அறிமுகம் செய்யப்பட்டுள்ள  புதிய நோக்கியா 3310 மொபைலில்  84 × 48 pixel மோனோக்ரோம் டிஸ்பிளேவுடன் முந்தைய மாடலின் அதே தாத்பரியங்களை கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளது.

கூடுதல் வசதிகளும் சேர்க்கப்பட்டு பழைய மொபைலை போன்ற வசதிகளையே பெற்ற ஒரு மாதம் வரை தாக்குபிடிக்கும் வகையிலான 1200mAh பேட்டரி முந்தையை மாடலை விட 10 மடங்கு கூடுதல் நேரம் வரை பேட்டரி தாங்கும் திறனை கொண்டதாக விளங்கும்.

நோக்கியா3310 வசதிகள்

  • புஸ் பொத்தான் ஐகானிக் வடிவத்தில்
  • 2 MP கேமரா எல்இடி ஃபிளாஷ்
  • ஹெட்போன் ஜேக்
  • 2.4” வளைந்த லேயர் கொடுக்கப்பட்டுள்ளதால் சூரிய ஒளியிலும் பார்க்க இயலும்
  • இரு சிம் கார்டு ஆப்ஷன்
  • 2ஜி அலைவரிசை  (GSM 900/1800 MHz)
  • புதிய UI நோட்ஸ்
  • 22 மணி நேரம் பேசும் திறன் கொண்ட அட்டகாசமான பேட்டரி
  • பன்பலை ரேடியோ மற்றும் MP3 பிளேயர்
  • 16 MB சேமிப்பு மற்றும் கூடுதலாக மைக்ரோ எஸ்டி வழியாக 32 GB வரை அதிகரிக்கலாம்
  • மைக்ரோ யூஎஸ்பி சார்ஜர்
  • புளூடூத் 3.0
  • நிறங்கள் சிவப்பு , மஞ்சள் ,நீலம் உள்பட கிரே

ஐரோப்பாவில் EUR 49 (Rs. 3,500) விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நோக்கியா3310 மொபைலில் சிவப்பு , மஞ்சள் ,நீலம் உள்பட கிரே ஆகிய வண்ணங்களில் வந்துள்ளது. இது தவிர நோக்கியாவின் 3 மற்றும் நோக்கியா5 மொபைல்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

நோக்கியா 3310 படங்கள்

Comments

comments