17 ஆண்டுகளுக்கு பிறகு நான் வருகிறேன்..! நீங்கள் தயாரா ?

Ads

சர்வதேச அளவில் தொலை தொடர்பு வரலாற்றில் நீங்கா இடம்பிடித்த நோக்கியா நிறுவனத்தின் 3310 மொபைல் 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புத்தம் புதிதாய் வந்துள்ள நிலையில் மே 8ந் தேதி முக்கிய அறிவிப்பை ஹெச்எம்டி வெளியிட உள்ளது.

நோக்கியா 3310 மொபைல்

2000 ஆம் ஆண்டில் தொலை தொடர்பு துறையில் புதிய மைல்கல்லாக நுழைந்த நோக்கியா 3310 எனப்படும் செங்கல் செட் மீண்டும் அறிவிக்கப்பட்ட நிலையில் 2017 மொபைல் வோர்ல்டு காங்கிரஸ் அரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில் சர்வதேச சந்தையில் சில நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நோக்கியா தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மே மாதம் நோக்கியா வருகைக்கான அறிவிப்பு மற்றும் மொபைல் விலை உள்பட முக்கிய தகவல்கள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் வரும் திங்கட்கிழமை ஹெச்எம்டி இது குறித்தான முக்கிய அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளது.

தனது அதிகார்வப்பூர்வ சமூக வளைதளங்களில் நோக்கியா வெளியிட்டுள்ள டீசர் வீடியோ ஒன்றில் நீங்கள் தயாரா ? நான் வருகிறேன் உங்கள் வழியில் மீண்டும் 17 ஆண்டுகளுக்கு பிறகு என பதிவிடப்பட்டுள்ளது. அதன் வீடியோ தொகுப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாத இறுதிக்குள் 120 நாடுகளில் நோக்கியா தன்னுடைய பிராண்டை நிலை நிறுத்த திட்டமிட்டுள்ள நிலையில் இந்தியாவில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் நோக்கியா மொபைல்களை தயாரிக்க உள்ளது. மேலும் நாடு முழுவதும் 400 க்கு மேற்பட்ட முதற்கட்ட ஷோரூம்களை திறப்பதுடன் சர்வீஸ் சார்ந்த மையங்களை நோக்கியா திட்டமிட்டுள்ளது.

நோக்கியா 3310 நுட்ப விபரங்கள்

  • புஸ் பொத்தான் ஐகானிக் வடிவத்தில்
  • 2 MP கேமரா எல்இடி ஃபிளாஷ்
  • ஹெட்போன் ஜேக்
  • 2.4” வளைந்த லேயர் கொடுக்கப்பட்டுள்ளதால் சூரிய ஒளியிலும் பார்க்க இயலும்
  • இரு சிம் கார்டு ஆப்ஷன்
  • 2ஜி அலைவரிசை  (GSM 900/1800 MHz)
  • புதிய UI நோட்ஸ்
  • 22 மணி நேரம் பேசும் திறன் கொண்ட அட்டகாசமான பேட்டரி
  • பன்பலை ரேடியோ மற்றும் MP3 பிளேயர்
  • 16 MB சேமிப்பு மற்றும் கூடுதலாக மைக்ரோ எஸ்டி வழியாக 32 GB வரை அதிகரிக்கலாம்
  • மைக்ரோ யூஎஸ்பி சார்ஜர்
  • புளூடூத் 3.0
  • நிறங்கள் சிவப்பு , மஞ்சள் ,நீலம் உள்பட கிரே

இந்திய சந்தையில் மீண்டுமொரு புரட்சியை நோக்கியா ஏற்படுத்துமா ? உங்கள் கருத்து என்ன ?

Comments

comments