ஜியோ 4ஜி அன்லிமிடேட் டேட்டா பெற 3 மணி நேரம்

Ads

ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ தொலைதொடர்பு நிறுவனம் ஹைப்பி நியூ இயர் சலுகையில் 1ஜிபி டேட்டா மார்ச் 31 , 2017 வரை வழங்கி வருகின்ற நிலையில் ஜியோ 4ஜி அன்லிமிடேட் டேட்டா பெற  வழி உள்ளதா ?

ஜியோ 4ஜி

இந்தியாவின் முன்னணி தொழில் குழுமத்தின் அங்கமான ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ 4ஜி சேவையை கடந்த செப்டம்பரில் தொடங்கி வருகின்ற மார்ச் 31 ,2017 வரை வெல்கம் ஆஃபர் மற்றும் ஹேப்பி நியூ இயர் போன்றவற்றில் இலவச டேட்டா சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றது. இதுதவிர வாடிக்கையாளர்களுக்கு இலவச அழைப்புகள் , எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்ஸ்கள் வழங்கப்படுகின்றது. மேலும் சமீபத்தில் நாம் வெளியிட்டிருந்த செய்தியின் அடிப்படையில் இலவச 4ஜி அல்லாமல் ரூ.100 கட்டணத்தில் 4ஜி டேட்டா ஜூன் 30 , 2017 வரை வழங்க வாய்ப்புகள் உள்ளது.

அன்லிமிடேட் டேட்டா 3 மணி நேரம்

முன்பே ஜியோ வெளியிட்டிருந்த கட்டண விகிதங்களின் அடிப்படையில் இந்த சேவையை வழங்குகின்றது. அதாவது இரவு 2 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இலவச அன்லிமிடேட் டேட்டாவை பெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றது.

இந்த சேவையை இரவு 2.05 மணி முதல்4.55 மணி வரை பயன்படுத்திக் கொள்ளலாம்

 

 

Comments

comments