வோடஃபோன் வழங்கும் ஒரு வருட இலவச நெட்ப்ளிக்ஸ் சந்தா..!

Ads

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தொலைதொடர்பு நிறுவனமான வோடபோன் தங்களது போஸ்ட்பெயிட் ரெட் பிளான் வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருட இலவச நெட்ப்ளிக்ஸ் சந்தா வழங்குகின்றது.

நெட்ப்ளிக்ஸ்

வீடியோ ஸ்டீரிமிங் சேவைகளில் முன்னணியாக விளங்கும் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் சேவைகளை ஒரு வருடத்திற்கு இலவசமாக பெறும் வகையில் வோடபோன் தங்களுடைய ரெட் பிளானில் உள்ள ரூ. 1,299 மற்றும் அதற்கு மேற்பட்ட பிளானில் உள்ள அனைவருக்கும் இலவசமக்க வழங்குகின்றது.

வோடபோன் ரெட் பிளானில் ரூ.499 முதல் அதிகபட்சமாக ரூ.2,999 வரையிலான பிளான்களை வோடஃபோன் வழங்கி வரும் நிலையில் ரூபாய் 1299 முதல் அதற்கு மேற்பட்ட பிளான்களை பெறும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே ஒரு வருடத்திற்கு சந்தா இலவசமாக வழங்குகின்றது.

குறிப்பாக ரெட் 1299 பிளானில் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் ,இலவச ரோமிங் உள்பட 20ஜிபி டேட்டா மேலும் கூடுதலாக வெல்கம் சலுகையாக 30ஜிபி டேட்டா, 100 இலவச எஸ்எம்எஸ் போன்றவற்றுடன் ரூ.500 இரு மாதங்களுக்கான நெட்ஃபிலிக்ஸ் கிரெடிட் பேலன்ஸ் ,  ஒரு வருடத்திற்கு இலவசமாக நெட்ஃபிளிக்ஸ் சந்தா பெறலாம்.

நீங்கள் ரெட் பிளான் வாடிக்கையாளர் என்றால் Netflix’ to 199 என்ற எஸ்எம்எஸ் வாயிலாகவோ அல்லது shop.vodafone.in வாயிலாக பெறலாம். வோடபோன் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.500, ரூ.600, மற்றும் ரூ.800 ஆகிய திட்டங்களில் வழங்குகின்றது. இவற்றில் ரூ.800 திட்டம் மட்டுமே ஹெச்டி பிளானை பெறும் வசதி உள்ளது.

மேலும் வோடபோன் ரெட் ஷீல்ட் வாயிலாக ரூ.50,000 மதிப்பிலான காப்பீடு திட்டங்களும் செய்யப்படுதப்பட்டுகின்றது. அமெரிக்காவைச் சேர்ந்த நெட்ஃபிளிக்ஸ் இந்தியாவில் வோடபோன் தவிர வீடியோகான் D2h மற்றும் ஏர்டெல் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து சேவையை வழங்குகின்றது.

Comments

comments