வாட்ஸ்அப் பற்றி சுவராஸ்ய டாப் 10 தகவல்கள்

Ads

வாட்ஸ்அப் செயலில் உள்ள விசேஷ அம்சங்கள் எண்ணற்ற மக்களை கட்டிபோட வைக்க காரனம் 5 நபர்கள் மட்டுமே. 5 நபர்கள் உருவாக்கிய வாட்ஸ்அப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய டாப்  10 தகவல்களை பார்க்கலாம்.

1. வாட்ஸ் அப் வரலாறு

 

2007 ஆம் ஆண்டில் பிரெயின் ஏக்டான் மற்றும் ஜேன் குவம் யாகூ நிறுவனத்தில் இருந்து பதிவி விலகினர். அதன் பிறகு பேஸ்புக் நிறுவனத்தில் பணிக்காக விண்ணப்பங்களை அனுப்பியதில் இருவரும் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.

2009 ஆம் ஆண்டில் ஜேன் குவம்  ஐபோன் ஒன்றை வாங்குகிறார்.அதில் உள்ள ஆப்ஸ் போன்றவற்றை பற்றி ஓரளவு தெரிந்துகொள்கிறார்.அதே சமயத்தில் தன்னுடைய நண்பர் அலெக்ஸ் பிஷ்மென் என்பவரை சந்தித்து பேசுகையில் ஐபோன் டெவலெப்பர் பற்றி பேசுகையில் தொடரும் உரையாடல் வாயிலாக அலெக்ஸ் அறிமுகப்படுத்திய நண்பரான ரென்ட்ஏகோடர் தளத்தின் ரஷ்யாவின் இகோர் என்பவரின் உதவியுடன் (whats..up..!) வாட்ஸ்..அப் என்ற உருவான வார்த்தையில் உடனடியாக வாட்ஸ்அப் என்ற பெயருடன் தொடங்க திட்டமிடுகின்றனர்.

2.  வாட்ஸ் அப் ஆரம்பம்

ஜேன் குவம் தன்னுடைய பிறந்த நாளான பிப்ரவரி 24 ,2009 யில் Whatsapp Inc என்ற பெயரில் இன்கார்பரேட்டட் என்ற பெயரில் கலிஃபோர்னியா மாகணத்தில் தொடங்குகின்றார்.ஆனால் பிரெயின் ஏக்டான் நிறுவனத்தின் பங்கேற்கவில்லை. வேலைக்கான முயற்சியிலே அவர் தொடர்ந்துள்ளார்.

 Jan Koum (Right)  and Brian Acton

3. முதல் முயற்சி

2009 யில் ஆப்பிள் ஐபோனில் வாட்ஸ் அப் 2.0 வெர்ஷனை வெளியிடுகின்றனர். வெளியிட்ட சில வாரங்களில் 2,50,000 ஆப்ஸ்கள் தரவிறக்கி பயன்படுத்த தொடங்கியுள்ளனர். உடனடியாக மீண்டும் பிரெயினை சந்தித்த குவாம் வேலை இல்லாமல் இருப்பதை விட வந்து இதில் பணியாற்று என கூறியதை தொடர்ந்து வாட்ஸ் அப் செயலி  யாகூவின் 5 முன்னாள் பணியாளர்களின் முயற்சியல் உருவெடுத்தது.

4. வேகமெடுத்த வாட்ஸ் அப்

நவம்பர் 2009 யில் ஆப்பிள் ஐஸ்டோர் வாயிலாக வாட்ஸ் அப் களமிறங்கியது. அதனை தொடர்ந்து இருமாதங்களில் பிளாக்பெர்ரி மொபைல்களில் களமிறங்கியது.

அதிகப்படியான பயணர்கள் அதிகரிப்பதனை கட்டுப்படுத்தும் நோக்கில் வாட்ஸ் அப் கட்டண சேவைக்கு மாற்றப்பட்டது. 2009 டிசம்பர் முதல் ஆப்பிள் வாட்ஸஅப் செயிலில் புகைப்படங்களை அனுப்பும் வசதியை பெற்றது.

2011 வாட்ஸ்அப் அமெரிக்காவின் ஆப்பிள் ஸ்டோரில் டாப் 20 ஆப்ஸ் வரிசையில் இடம்பிடித்தது.

5. வாட்ஸ்அப் பயணர் எண்கள்

  • பிப்ரவரி 2013 வாட்ஸ்அப் பயணர்கள் 200 மில்லியன்
  • டிசம்பர் 2013 வாட்ஸ் பயணர்கள் 400 மில்லியன்
  •  22, ஏப்ரல் 2014 வாட்ஸ்அப் பயணர்கள் 500 மில்லியன் , 700 மில்லியன் புகைப்படங்கள் மற்றும் 100 மில்லியன் வீடியோக்கள் தினமும் பகிர்வு
  • உங்களுக்கு தெரியுமா வாட்ஸ்அப் அதிக பயணர்களை கொண்ட தனிநாடு பட்டியலில் இந்தியா முதலிடம்
  • பிப்ரவரி 2016 1 பில்லியன் என்கின்ற இமாலாய சாதனையை பெற்றது.
  • ஜூன் 2016 தினமும் 100 மில்லியன் வாட்ஸ் அப் அழைப்புகள்

6. நிராகரித்த பேஸ்புக் மற்றும் டிவிட்டர்

 பிரெயின் ஏக்டான் மற்றும் ஜேன் குவம் இருவரும் வேலை தேடி பேஸ்புக் மற்றும் டிவிட்டர் நிறுவனங்களுக்கு முயற்சி செய்து தோற்றுள்ளனர்.
7. உங்கள் வாட்ஸ்ப் ஐடி என்ன
வாட்ஸ்அப் மொபைல் எண்களை அடிப்படையாக கொண்டே ஐடிகளை உருவாக்கி கொள்கின்றன. அதாவது உங்கள் ஐடி இவ்வாறு இருக்கும் [phone number]@s.whatsapp.net எப்படி என்றால் [email protected] ஆகும்.
8. வாட்ஸ்அப் கம்பரெஷன்
உங்கள் வீடியோ மற்றும் புகைப்படங்கள் போன்ற தகவல்களை வாட்ஸ்அப் சிறி அளவிலான மெம்மரி எடுத்துக்கொள்ளும் வகையில் கம்பிரஷ் செய்துகொள்ளும்.
9. உங்கள் தகவல்கள் வாட்ஸ்அப் வசம் இல்லை
உங்களுடைய எந்த தகவலை பரிமாறுவதனையும் வாட்ஸ்அப் செர்வர்களில் சேமித்து வைத்து கொள்வதில்லை எனவே நீங்கள் கூகுள் டிரைவ் அல்லது ஐகிள்வூட் வாயிலாக மட்டுமே சேமிக்க முடியும்..
10 எண்ட் டூ எண்ட் என்கிரிப்ஷன்
தனிநபர் பாதுப்பினை கருத்தில் கொண்டு அனைத்து வாட்ஸ்-அப் டேட்டாக்களும் முழுவதுமாக 256 பிட் என்கிரிப்ஷன் செய்யப்பட்டு அனுப்படுகின்றது.

வாட்ஸ்-அப் உங்களுக்கு பிடிக்க காரணம் என்ன மறக்காமா கமெண்ட்ஸ் பன்னுங்க…..

ரூ.500 முதல் ரூ.16000 விலை சலுகையில் ஸ்மார்போன் வாங்க கீழுள்ள இணைப்பை படத்தை க்ளிக் பன்னுங்க…

 Buy Intex mobiles

Comments

comments