சியோமி ரெட்மி 3எஸ் ,ரெட்மி 3 எஸ் பிரைம் விற்பனைக்கு வந்தது

Ads
சீனாவின் சியோமி ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரின் ரெட்மி 3எஸ் ரூ.6,999 விலையிலும் , ரெட்மி 3எஸ் பிரைம் ரூ.8,999 விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. எம்ஐ மற்றும் பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு கிடைக்கும்.

பட்ஜெட் விலையில் களமிறங்கியுள்ள சியோமி ரெட்மி 3S மற்றும் ரெட்மி 3S Prime  என இரு மொபைல் போன்களில் முதலாவதாக ரெட்மி 3எஸ் பிரைம் வருகின்ற ஆகஸ்ட் 9 முதல் விற்பனைக்கு கிடைக்கும். ரெட்மி 3எஸ் ஆகஸ்ட் 16 முதல் கிடைக்கும். Mi.com மற்றும் பிளிப்கார்ட் தளத்தில் எக்ஸ்குளுசிவாக விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

ரெட்மி 3 எஸ்  மற்றும் ரெட்மி 3 எஸ் பிரைம்

ரெட்மி நோட் 3 ஸ்மார்ட்போனை அடிப்படையாக கொண்டு மேக் இன் இந்தியா முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ள ரெட்மி 3எஸ் பட்ஜெட் ரக மொபைல்போனில் 3 எஸ் மற்றும் 3எஸ் பிரைம் என இருமாடல்களுக்கும் உள்ள முக்கிய வித்தியாசமே ரேம் மற்றும் இன்ட்ர்னல் மெம்மரி மட்டுமே.

ரெட்மி 3எஸ் மாடலில் 2 ஜிபி ரேம் 16ஜிபி சேமிப்பு திறனுடன் கிடைக்கும் , ரெட்மி 3எஸ் பிரைம் மொபைலில் 3ஜிபி ரேம் 32ஜிபி சேமிப்பு திறனுடன் கைரேகை ஸ்கேனர் கிடைக்கும் , மற்றபடி இரு மொபைல்களும் மெட்டல் பாடியை கொண்டதாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

5 இன்ச் முழு ஹெச்டி திரையுடன் கூடிய ஸ்மார்ட்போனில் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோகோர் 430 ஸ்னாப்டிராகன் பிராசஸர் பெற்று ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லா இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட MIUI 7.5 வெர்சனில் இயங்குகின்றது.

இரு மொபைல்களிலும் 128ஜிபி வரையிலான கூடுதல் சேமிப்பு திறனை பெறும் வகையில் மைக்ரோஎஸ்டி கார்டினை பெறலாம்.  13 மெகாபிக்சல் ரியர் கேமராவில் தெளிவான படங்கள் 1080p வீடியோவினை பதிவு செய்யும் வகையில் இரட்டை எல்இடி பிளாஷ் மற்றும் பேஸ் டிடெக்ஷ்ன் ஆட்டோஃபோகஸ் போன்ற வசதிகள் உள்ளன. முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் ஆட்டோஃபோகஸ் கேமரா இடம்பெற்றுள்ளது.

4G, Wi-Fi, GPRS/ எட்ஜ்,  GPS/ A-GPS, பூளூடூத், Glonass, வை-ஃபை 802.11 b/g/n, மற்றும் Micro-USB போன்றவற்றை பெறலாம். 4100mAh பேட்டரி பேக்கப் பெற்றுள்ளதால் நாள் முழுமைக்கும் சிறப்பான பேட்டடரி கிடைக்கும்.

கடந்த முதல் பிளாஷ் விற்பனையில் 90,000 மொபைல்கள் 8 நிமிடத்தில் விற்பனை செய்து சாதனை படைத்தது. தற்பொழுது ஒபன் விற்பனை முறையில் இன்று 12 மணி முதல் கிடைக்கும்.

ரெட்மி 3 எஸ் விலை விபரம்

ரெட்மி 3 எஸ் விலை ரூ.6,999
ரெட்மி 3 எஸ் பிரைம் விலை ரூ.8,999

மொபைல் வாங்க

Comments

comments