இன்றைய கூகுள் ஹிப் ஹாப் டூடுல் சிறப்பம்சங்கள் என்ன ?

Ads

இன்றைய கூகுள் முகப்பை அலங்கரித்துள்ள 44 வது வருட ஹிப் ஹாப் இசை பிறந்ததை போற்றும் வகையில் கூகுள் தனது முகப்பில் அலங்கரித்துள்ளது. முதன்முறையாக 1973 ஆண்டு ஆகஸ்ட் 11ந் தேதி ஹிப் ஹாப் இசை பிறந்தது.

ஹிப் ஹாப் டூடுல்

44 ஆண்டுகளுக்கு முன்னதாக நியூ யார்க் நகரில் அமைந்துள்ள பிரான்க்ஸ் 1520 Sedgwick Ave என்ற இடத்தில் முதன்முறையாக ஹிப் ஹாப் இசை வெளியானது. தற்போது உலகயளவில் பல்வேறு நாடுகளில் அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப மாறி பரவி வருகின்றது.

முதன்முறையாக 1970களிலிருந்து ஆபிரிக்க அமெரிக்கர்கள், இலத்தீன் அமெரிக்கர்களாலும் நியூயார்க் நகரத்தில் உருவாக்கப்பட்டதாகும். இன்றைக்கு தொடங்கப்பட்டத்தை நினைவுக்கூறும் வகையில் வெளியிடப்பட்டுள்ள கூகுள் டூடுல் பகுதியில் நீங்களும் ஹிப் ஹாப் இசையை உருவாக்கும் வகையில் வழங்கியுள்ளது.

இன்றைய கூகுள் முகப்பில் அலங்கரித்துள்ள இந்த ஹிப் ஹாப் சிறப்பு டூடுல் 40 மணி நேரம் முகப்பில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நீங்களும் உங்கள் விருப்பம் போல கூகுள் டூடுல் வாயிலாக ஹிப் ஹொப் இசை உருவாக்குங்கள்.