வளர்ந்து வரும் ஆன்லைன் பரிமாற்றங்களுக்கு ஏற்றபடி நவீன சேவையை வங்கிகளும் வழங்க தொடங்கியுள்ள நிலையில் USSD வழியாக இணைய இனைப்பிலாமல் மொபைல் பேங்க் சேவையை பயன்படுத்துவது எவ்வாறு என தெரிந்துகொள்ளலாம்.

USSD மொபைல் பேங்கிங் பயன்படுத்துவது எவ்வாறு ?

எவ்விதமான ஆப்ஸ் பயன்பாடு மற்றும் இணைய இனைப்பு இல்லாத மொபைல்களிலும் பயன்படுத்தும் வகையிலான   National Unified USSD Platform (NUUP) திட்டத்தில் எந்த மொபைலிலும் பயன்படுத்தி கொள்ள இயலும். USSD மொபைல் பேங்கிங் ஸ்மார்ட்போன் அவசியமில்லை நோக்கியா 1100 மொபைலில் கூட இந்த சேவையை பெறலாம் . USSD மொபைல் பேங்கிங் செய்வது எவ்வாறு ? தமிழ் மொழியிலும் இந்த சேவை கிடைக்கின்றது.

USSD மொபைல் சேவை மொழிகள் விபரம்

உங்கள் மொபைலில் இருந்து *99# என்பதனை டயல் செய்தால் உங்களுக்கு மொபைல் பேங்க் சேவை கிடைக்கும். பிராந்திய மொழிகள் ரீதியான பட்டியல் கீழே சேர்க்கப்பட்டுள்ளது. தமிழ் மொழிக்கு *99*23# ஆகும்.

 • தமிழ் (*99*23#)
 • ஹிந்தி (*99*22#)
 • மராத்தி (*99*28#)
 • பெங்காலி (*99*29#)
 • பஞ்சாபி (*99*30#)
 • கன்னடா (*99*26#)
 • குஜராத்தி (*99*27#)
 • தெலுங்கு (*99*24#)
 • மலையாளம் (*99*25#)
 • ஒரியா (*99*32#)
 • அசாமி (*99*31#)

USSD மொபைல் பேங்கிங் பயன்படுத்துவது எவ்வாறு ?

யூஎஸ்எஸ்டி மொபைல் பேக்கிங் எந்த மொபைல் நம்பர் பயன்படுத்துவது ?

உங்கள் வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை கொண்டு மட்டுமே யூஎஸ்எஸ்டி மொபைல் பேங்க் சேவையை பெறலாம். பதிவு செய்யாத மொபைல் எண்களில் இந்த சேவையை பெற இயலாது. மேலும் எத்தனை வங்கிகளிலும் ஒரே மொபைல் எண்ணை பதிவு செய்திருந்தாலும் பயன்படுத்த இயலும். உங்கள் மொபைல் எண்ணை சேர்க்கவில்லை எனில் உங்கள் வங்கியை அனுகுங்கள். மேலும் NUUP யில் உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்வது கட்டாயம்.

யூஎஸ்எஸ்டி மொபைல் பேக்கிங் கட்டண விபரம்

USSD மொபைல் பேங்க் சேவையை பயன்படுத்தி மொபைல் ரீசார்ஜ் , லேண்ட்லைன் பில் , மின்சார பில் , டிடிஹெச் பில் போன்றவற்றுடன் ரூ.1 முதல் ரூ.5000 வரை வங்கி பரிமாற்றம் செய்யலாம்.இதற்கு கட்டனமாக 0.50 பைசா ஓவ்வொரு பரிமாற்றத்தின் பொழுதும் வசூலிக்கப்படும்.

USSD மொபைல் பேங்கிங் செய்வது எவ்வாறு ?

உங்கள் வங்கி கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து *99# அல்லது தமிழ் மொழிக்கு *99*23# என்ற எண்ணை டயல் செய்தபின்னர் இவ்வாறு ஒரு திரை தோன்றும்.

USSD மொபைல் பேங்கிங் பயன்படுத்துவது எவ்வாறு ?

USSD மொபைல் பேங்கிங் பயன்படுத்துவது எவ்வாறு ?

டயல் செய்தபின்னர் இவ்வாறு ஒரு திரை தோன்றும் இவ்வாறு இவற்றில் நீங்கள் பயன்படுத்தும் வங்கியின் முதல் மூன்று எழுத்துகள் (eg.SBI , HDF , ICI ,  UBIN ) அல்லது  IFSC குறியீட்டின் முதல் 4 எழுத்துக்குள் (eg.SBIN) அல்லது உங்கள் வங்கி கனக்கின் கடைசி இரண்டு எண்கள் கொடுங்கள்.. USSD மொபைல் பேங்கிங் பயன்படுத்துவது எவ்வாறு ?

அதன் பின்னர் திரையில் இது போன்று தோன்றும்.

USSD மொபைல் பேங்கிங் பயன்படுத்துவது எவ்வாறு ?

இதிலுள்ள ஆப்ஷனில் உங்களுக்கு தேவையான வகையில் தேர்வு செய்துகொள்ளுங்கள்.. பின்னர்..

USSD மொபைல் பேங்கிங் பயன்படுத்துவது எவ்வாறு ?

USSD மொபைல் பேங்கிங் பயன்படுத்துவது எவ்வாறு ?

 

 

இவ்வாறு நீங்கள் எந்த மொபைலில் இருந்தும் பணம் யூஎஸ்எஸ்டி மொபைல் பேக்கிங் வழியாக பண பரிவர்த்தனை செய்யலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here