12 இந்திய பிராந்திய மொழிகளும் சிறப்பான வசதிகளுடன் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் யூனைட் 4 புரோ ஸ்மார்ட்போன் விளங்குகின்றது. யூனைட் 4 மொபைலில் கைரேகை சென்சார் , 4G LTE , 2 GB ரேம் போன்ற சிறப்பான பாதுகாப்பினை பெற்றுள்ளது.

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் யூனைட் 4 புரோ மொபைல் வாங்கலாமா - விமர்சனம்

ரூ.9,499 மதிப்புள்ள கேன்வாஸ் யூனைட் 4 புரோ மொபைல் ரூ.2000 தள்ளுபடி விலையுடன் ரூ.7,499 விலையில் ஸ்னாப்டீல் வழியாக மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. கேன்வாஸ் மொபைல்போன் வாங்கலாமா அதில் உள்ள சிறப்பு அம்சங்கள் மற்றும் குறைகள் பற்றி அலசி பார்க்கலாம்.

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் யூனைட் 4 புரோ நுட்பங்கள்

 • டிஸ்பிளே : 5 இன்ச் ஹெச்டி (1280 x 720) ஐபிஎஸ் டிஸ்பிளே 
 • இயங்குதளம் : ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் இன்டஸ் 2.0
 • பிராசஸர் :1.3GHz குவாட்கோர் Spreadtrum (SC9832) பிராசஸர் 
 • ரேம் : 2 GB 
 • கேமரா : 8 மெகாபிக்சல் ஆட்டோஃபோகஸ் பிளாஷ் கேமரா
 • முன் கேமரா: 5 மெகாபிக்சல் கேமரா
 • சேமிப்பு : 16 GB (MicroSD card upto 32GB )
 • சிம் ; இரண்டு சிம்
 • பேட்டரி ; 3900 mAh
 • மற்றவை : 4G LTE , 3G , GSM , பூளூடூத் , வைஃபை , ஆப்பஜார் மேலும் பல
 • சிறப்பு வசதிகள் : கைரேகை ஸ்கேனர், 12 இந்திய மொழிகள் தமிழ் உள்பட
 Micrmax canvas unite 4 pro

செயல்திறன்

தொடக்கநிலை ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கும் மொழிரீதியாக பல வசதிகளை வழங்குவதில் முன்னனி வகிக்கும் இந்தியாவின் மைக்ரோமேக்ஸ் நல்ல வரவேற்பினை பெற்று விளங்குகின்றது. புதிதாக வந்துள்ள கேன்வாஸ் யூனைட் 4 புரோ மொபைல் கைரேகை ஸ்கேனருடன் , இந்தியாவின் இன்டஸ் ஓஎஸ் இயங்குதளத்தின் வாயிலாக சிறப்பான ஆப்ஷன்களுன் விரைவான செயல்திறன் கொண்டு செயல்படுகின்றது. 
2ஜிபி ரேம் ஸ்பீரட்டிரம் 1,3 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸருடன் இணைந்து இன்டஸ் ஓஎஸ் 2.0 தளத்தில் அற்புதமாக வேலை செய்கின்றது. பட்ஜெட் விலையில் அமைந்திருந்தாலும்  கைரேகை ஸ்கேனர் மொபைல் பாதுகாப்பினை உறுதி செய்கின்றது.  கைரேகை ஸ்கேனர் 0.3 விநாடிகளுக்குள் செயல்படும்.
மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் யூனைட் 4 புரோ மொபைல் வாங்கலாமா - விமர்சனம்
அதிக மெம்மரி தேவைப்படும் கேம்ஸ் விளையாடும் பொழுது நன்றாக செயல்படுகின்றது. இன்டஸ்ஓஎஸ் இயங்குதளத்தின் ஆப் பஜார் வாயிலாக மிக எளிமையாக விரும்பும் ஆப்ஸ்களை இலவசமாக டவுன்லோட் செய்யலாம்.
தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடா , ஹிந்தி , ஓடியா ,பஞ்சாபி , மராத்தி , பெங்காலி, அசாமிஸ் , குஜராத்தி மற்றும் ஆங்கிலம் என மொத்தம் 12 மொழிகளில் மொபைல்போன் மாறிக்கொள்ளும்.
குறுஞ்செய்திகள் , டைப்பிங் போன்றவைக்கு மிக இலகுவாக ஸ்வைப் செய்து நமக்கு தேவையான மொழியில்எளிமையாக டைப் செய்யலாம்.  
கேமரா
8 மெகாபிக்சல் கேமரா பெர்ஃபாமென்ஸ் பொருத்தவரை பட்ஜெட் ரகத்தில் சிறப்பான மற்றும் தெளிவான படங்களை வெளிப்படுத்துகின்றது. சராசரி என்பதனை தான்டி கேமரா செயல்பாடு உள்ளது. ஆட்டோஃபோகஸ் , எல்இடிபிளாஷ் போன்வை பெற்றுள்ளது. சிறப்பான செல்ஃபீ படங்களை எடுக்க 5 மெகாபிக்சல் கேமரா உதவுகின்றது.
மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் யூனைட் 4 புரோ மொபைல் வாங்கலாமா - விமர்சனம்
பேட்டரி

நாள் முழுமைக்கும் சிறப்பான பேட்டரி பேக்கப் வழங்கும் வகையில் 3900mAh பேட்டரி பெற்று சிறப்பாக செயல்படுகின்றது. 35 மணி நேரம் பேசும் வசதி மற்றும் 700 மணி நேரம் ஸ்டான்ட் அப்டைம் பெற்றுள்ளது. கேம்ஸ் மற்றும் டேட்டா பயன்பாடு அதிகம் உள்ளவர்ளுக்கு ஏற்ற பேட்டரி பேக்கப்பை பெற்றுள்ளது.  
சிறப்பு வசதிகள்
கைரேகை ஸ்கேனர் மொபைல் பாதுகாப்பினை உறுதி செய்கின்றது.
12 இந்திய பிராந்திய மொழிகள்
3900mAh பேட்டரி பேக்கப்
4ஜி LTE  சேவையில் 150mbps டவுன்லோட் வேகம் 50mbps அப்லோட்
ஆப்பஜார் வாயிலாக எளிமையாக ஆப்ஸ் டவுன்லோட் செய்யலாம்.
எளிமையாக டைப் செய்ய ஏற்ற இன்டஸ் ஓஎஸ்
மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் யூனைட் 4 புரோ மொபைல் வாங்கலாமா - விமர்சனம்
பாஸ்டிவ்
 • கைரேகை சென்சார்
 • 4G LTE
 • நாள் முழுமைக்கும் சிறப்பான பேட்டரி பேக்கப்
 • தமிழ் உளப்பட  12 இந்திய பிராந்திய மொழிகள்
 • சிறப்பான கேமரா பெர்ஃபாமென்ஸ்
 • இன்டஸ் ஓஎஸ்
 • தங்குதடையற்ற செயல்திறன்
 • பட்ஜெட் விலையில் சிறப்பான மொபைல்
நெகட்டிவ்
 • கேமரா வெளிச்சம் குறைவான இடத்தில் தெளிவாக இல்லை
 • அறிவிப்புகளுக்கான எல்இடி லைட் இல்லை
 • எஸ்டரனல் மெமமரி 32ஜிபி மட்டுமே
விலை விபரம்
கேன்வாஸ் யூனைட் 4 புரோ ரூ,9499 விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும் அதிரடி சலுகையாக ரூ.2000 தள்ளுபடியில் ரூ.7499 விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.
மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் யூனைட் 4 புரோ மொபைல் வாங்கலாமா - விமர்சனம்

கேட்ஜெட்ஸ் தமிழன் தீர்ப்பு

மொழி தடையை நீக்கி சிறப்பான சேவையை அளிக்கவல்ல ஸ்மார்ட்போன் ஆக விளங்குகின்றது. நடுநிலையான சந்தையில் ஸ்மார்ட்போன் பாதுகாப்பினை உறுதிசெய்யும் வகையில் கைரேகை சென்சார் ,  2GB பெர்ஃபாமென்ஸ் ரேம் பிராசஸர் , 4G LTE ஆதரவு , சிறப்பாக நாள்முழுதும் இயங்கும் வகையிலான லித்தியம்ஐன் பேட்டரி 3900mAh சேமிப்பு பெற்றுள்ளது. 
முதன்முறையாக ஸ்மார்ட்போன் தேர்ந்தெடுப்பவர்கள் , மொழி தடை பிரச்சனை இல்லாமல் இயங்க , பட்ஜெட்  ரகத்தில் அட்டகசமான ஸ்மார்ட்போனாக கேன்வாஸ் யூனைட் 4 புரோ விளங்குகின்றது. தாரளமாக நீங்கள் கேன்வாஸ் யூனைட் 4 புரோ மொபைலை வாங்கலாம்.
ஸ்டார் ரேட்டிங் : 3.8/5
எங்கே வாங்க
மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் யூனைட் 4 புரோ ஸ்மார்ட்போன் எக்ஸ்குளூசிவாக ஸ்னாப்டீல் தளத்தின் வாயிலாக விற்பனை செய்யப்படுகின்றது. சிறப்பு ஆஃபராக ஏர்டெல் வாடிக்கையாளர்கள் 6 மாத டபூள் டேட்டா பெறலாம். கீழுள்ள (BUY NOW SNAPDEAL) படத்தினை க்ளிக்செய்து வாங்கி சிறப்பு ஆஃபர்களை பெற்றுக்கொள்ளுங்கள்
 Micrmax canvas unite 4 pro

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here