இந்தியாவில் எக்ஸ்-டி 3 கண்ணாடியற்ற டிஜிட்டல் கேமராவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது:  ஃபூஜி ஃபிலிம் அறிவிப்பு

ஜப்பானை சேர்ந்த போட்டோகிராபி மற்றும் இமேஜிங் நிறுவனமான ஃபூஜி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம், தனது புதிய மாடலான எக்ஸ் சீரிஸ் கண்ணாடியற்ற டிஜிட்டல் கேமராவான எக்ஸ்-T3௩ கேமராவை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கேமராவின் விலை 1 லட்சத்து 17 ஆயிரத்து 999 ரூபாய் என்றும் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எக்ஸ்-T3 கண்ணாடியற்ற டிஜிட்டல் கேமராகள் பிளாக் மற்றும் சில்வர் என இரண்டு கலரில் கிடைக்கிறது. இதுமட்டுமின்றி, 18-55mm லென்ஸ்கள் பொருத்தப்பட்ட கேமராகளும் விற்பனை வந்துள்ளது இவற்றை 1 லட்சத்து 49 ஆயிரத்து 999 ரூபாய் விலையில் வாங்கி கொள்ளலாம் என்று ஃபூஜி ஃபிலிம் இந்தியா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய ஃபூஜி ஃபிலிம் இந்திய நிறுவன உயர்அதிகாரி ஹருடோ ஐவாடா, எங்கள் நிறுவனத்தின் 10வது ஆண்டு விழாவை கொண்டாடி வரும் நிலையில், எக்ஸ்-டி 3 கண்ணாடியற்ற டிஜிட்டல் கேமராவை அறிமுகம் செய்துள்ளதில் பெருமை கொள்கிறோம் என்றார்.  மேலும் அவர், ஃபூஜி ஃபிலிம் நிறுவனத்தின் புதிய எக்ஸ்-T3 கேமராக்கள், முந்தைய தயாரிப்புகளை போன்றே வரவேற்பை பெரும் என்று நம்புகிறோம் என்றார்.

இந்தியாவில் எக்ஸ்-டி 3 கண்ணாடியற்ற டிஜிட்டல் கேமராவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது:  ஃபூஜி ஃபிலிம் அறிவிப்பு

ஃபூஜி ஃபிலிம் நிறுவனத்தின் எக்ஸ் சீரிஸ் கண்ணாடியற்ற டிஜிட்டல் கேமராக்களில், பிரமிக்கத்தக ரீபுரோடைக்சன் டெக்னாலஜிகளுடன் உயர்தரம் கொண்ட இமேஜ் குவாலிட்டியை ஸ்டில்ஸ் மற்றும் வீடியோ ஆகிய இரண்டிலும் அளிக்கும். புதிய மாடல் எக்ஸ்-T3-க்கள், புதிய எக்ஸ்-டிரான்ஸ் CMOS 4 செண்டார் மற்றும் எக்ஸ்-பிராசாசர் 4 இமேஜ் பிராசசிங் இன்ஜின்களையும் கொண்டுள்ளது. இந்த எக்ஸ்-டிரான்ஸ் CMOS 4, பிளாக்-இலுமினட்டட் APS-C சென்சார்கள், நான்கு முறைக்கு மேற்பட்ட பேஸ் டிசைக்ஷ்ன் பிக்சல்களை கொண்டுள்ளது. இதே வ்ச்ச்திகுள் எக்ஸ் -T2 மற்றும் எக்ஸ் – H1 மாடல்களிலும் இருக்கும்.

ரெசலுசனை அதிகப்படுத்த 26.1 எம்பி, சென்சார்கள் பயன்படுத்தப்படுவதுடன், தனித்துவமிக்க கலர் பில்டர்கள், தேவையற்ற கலர்களை கட்டுப்படுத்தவும் உதவும். இதில் இடம் பெற்றுள்ள சென்சாரின் வேகம் தற்போதைய மாடல்களில் உள்ளதை விட 50 சதவிகிதம் அதிகமாக இருக்கும். இதுமட்டுமின்றி எக்ஸ்-T3 கேமராக்கள் 4K வீடியோகளை 60fps வேகத்தில் பதிவு செய்யும். குறைந்த ஒளி கொண்ட இடங்களில் ஆட்டோ போக்கஸ்கள், -3EV அளவுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளதால், குறைந்த லைட் உள்ள இடங்களிலும் துல்லியமான போகஸ்களை பெற முடியும்.

இந்தியாவில் எக்ஸ்-டி 3 கண்ணாடியற்ற டிஜிட்டல் கேமராவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது:  ஃபூஜி ஃபிலிம் அறிவிப்பு

கேமராவில் உள்ள எக்ஸ் பிராசசர் 4 இன்ஜினில் நான்கு சிபியு யூனிட்கள் உள்ளன. இவை இமேஜ் பிராசசிங் வேகத்தை மூன்று மடக்கு அதிகரிக்கும். இந்த எக்ஸ்-T3 கேமராக்கள் இந்திய மார்க்கெட்டில் முக்கிய பங்கு வகித்து அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகள் எங்கள் நிறுவனத்தின் மார்க்கெட் ஷேர்-ஐ 30 சதவிகிதம் அளவுக்கு உயர்த்தும் என்று ஃபூஜி ஃபிலிம் இந்திய நிறுவன உயர்அதிகாரி ஹருடோ ஐவாடா தெரிவித்துள்ளார்.