அறிமுகமானது  நிக்கான் ஜீ சீரியஸ் கேமிராக்கள்

அறிமுகம் நிக்கான் ஜீ சீரியஸ் கேமிராக்கள்… நிக்கான் நிறுவனமும் தற்போது மிர்ரஸ் லெஸ் கேமிராவை அறிமுகம் செய்துள்ளது.

பல பெரிய நிறுவனங்கள் ஏற்கனவே இந்த மிர்ரர்லெஸ் தொழில்நுட்பத்தில் வந்துவிட்ட நிலையில் தற்போது நிக்கான் நிறுவனமும் இந்த தொழில்நுட்பத்தில் இறங்கியுள்ளது. முதல் கட்டமாக ஜீ சீரியஸ் 7, ஜீ சீரியஸ் 6 என்று இரண்டு மாடல்களை அறிமுகம் செய்துள்ளனர்.

அறிமுகமானது  நிக்கான் ஜீ சீரியஸ் கேமிராக்கள்

இதுவரை படம் எடுக்கும் பிம்பங்கள் கேமிராவிற்குள் இருந்த பிரிசம் என்ற கண்ணாடியில் பட்டு பிறகே சென்சாரில் பதிவானது இப்போது இந்த பிரிசம் என்ற கண்ணாடியை எடுத்துவிட்டதால் மிர்ரர்லெஸ் கேமிராவாகிவிட்டது.இதனால் என்ன பயன் என்றால் கேமிராவின் எடை வெகுவாக குறைந்துவிட்டது வீடியோ உள்ளீட்ட பயன்பாடுகளின் துல்லியம் அதிகரித்துவி்ட்டது .

அறிமுகமானது  நிக்கான் ஜீ சீரியஸ் கேமிராக்கள்

நிக்கானின் பாரம்பரியமான எப் மவுண்ட் ஜீ மவுண்ட் என மாறிவிட்டது விட்டத்தின் அளவும் அதிகரித்துவிட்டது.ஹைபிரிட் சென்சார் என்பதால் போகஸ் விரைவாகவும் துல்லியமாகவும் இருக்கும். 0.95 தரத்தில் எஸ் நாக்ட் என்ற லென்ஸ் போட்டு படம் எடுக்கலாம் ஏற்கனவே உள்ள நிக்கான் லென்ஸ்களை அடாப்டர் போட்டு இந்த புதிய கேமிராவில் பயன்படுத்திக்கொள்ளலாம். அதிக கவனம் வீடியோவிற்கு தரப்பட்டுள்ளது,மெமரி கார்டு ஸ்லாட் ஒன்றுதான் உள்ளது, மூன்று லட்ச ரூபாய் செலவழித்தால்தான் இந்த கேமிரா கிட்டை பயன்படுத்த முடியும் என்பது போன்ற விஷயங்களும் உண்டு.