ஹை ஜூம் கேமராவை இந்தியாவில் அறிமுகம் செய்தது சோனி; விலை ரூ. 34,990

சோனி இந்தியா நிறுவனம் சைபர் சூட் கேமரா வகைகளில் புதிய கேமராவான DSC-WX800 கேமராவை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கேமராக்கள் இன்று முதல் விற்பனை வந்துள்ளது. 34 ஆயிரத்து 990 ரூபாய் விலையில் விற்பனைக்கு வந்துள்ள இந்த புதிய மாடல் கேமராக்கள் உலகின் சிறிய பாடி கொண்டதுடன், 24mm முதல் 720mm வரை ஜூம் ரேஞ்ச் உடன் சூப்பர் டெலிபோட்டோ கொண்டதாக இருக்கும்.

இந்த கேமராக்களில் BIONZ X இமேஜ் பிராசச்சிங் இஞ்சின்களுடன் முன்புறமாக LSI-களுடன் அதிகவேக சூட்டின் திறனுடன் அதாவது 10 fps-களுடன், 155 இமேஜ்களை பதிவு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹை ஜூம் கேமராவை இந்தியாவில் அறிமுகம் செய்தது சோனி; விலை ரூ. 34,990

180 டிகிரி வளையும் தன்மை கொண்ட LCD ஸ்கீரின் மூலம் எளிதாக செல்பிகளையும், குரூப் போட்டோகளையும் எடுக்க முடியும். ப்ளூடூத் வசதி மூலம் தகவலை மொபைலில் இருந்து எடுத்து கொள்ளும் வசதியும் உள்ளது.

இந்த கேமராக்கள் நாட்டில் உள்ள அனைத்து சோனி மையங்களிலும், ஆல்பா ஸ்டோர்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பெரிய எலக்ட்ரானிக் ஸ்டோர்களிலும் கிடைக்கும் .