டிஷ் டிவி ஆண்ட்ராய்டு டிவி செட்-டாப் பாக்ஸ் மற்றும் டிஷ் SMRT கிட் அறிமுகம்

இந்தியாவின் முன்னணி டிடிஎச் சேவை வழங்குநர்களில் ஒன்றான டிஷ் டிவி புதிதாக ஆண்ட்ராய்டு டிவி செட்-டாப் பாக்ஸ் மற்றும் டிஷ் SMRT கிட் அலெக்ஸா ஆதரவுடன்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டிஷ் டிவி இந்தியாவில் இரண்டு ஸ்மார்ட் கனெக்ட்டிவிட்டி சாதனங்களில் முதலாவது டிஷ் SMRT ஹப், இது ஆண்ட்ராய்டு ஒஎஸ் மூலம் இயங்கும் செட்-டாப் பாக்ஸ் ஆகும். இரண்டாவது டிஷ் SMRT கிட், இது அமேசான் அலெக்சா ஆதரவு பெற்று இயங்கும் டாங்கிள் ஆகும். இந்த சாதனங்களுடன், டிஷ் டிவி பயனர்களுக்கு டிவி உள்ளடக்கம் மற்றும் வீடியோ ஸ்ட்ரீமிங்கிற்கு ஏற்றதை நோக்கமாக கொண்டுள்ளது.

டிஷ் SMRT ஹப் வசதிகள் மற்றும் சிறப்புகள்

டிஷ் ஸ்மார்ட் ஹப் புதிய சந்தாதாரர்களுக்கு ரூ .3,999 கட்டணதுக்கு கிடைக்க தொடங்கியுள்ளது. நீங்கள், முன்பாகவே டிஷ் டிவி சந்தாதாரராக இருந்தால் ரூ. 1,500 தள்ளுபடி மூலம் ரூ.2,499 கட்டணத்தில் பெறலாம்.

சிறப்பம்சங்களைப் பற்றி பேசுகையில், ஆண்ட்ராய்டு ஓஎஸ் கொண்டு இயங்கும் செட்-டாப்-பாக்ஸ் அண்ட்ராய்டு 9 பை மூலம் இயங்குகிறது. இது கூகிள் ஆசிஸ்டென்ஸ் மற்றும் கூகிள் பிளே ஸ்டோருக்கான ஆதரவோடு வருகிறது. கூடுதலாக ஜீ5, வூட், யூடியூப், ஆல்ட் பாலாஜி மற்றும் அமேசான் பிரைம் வீடியோ போன்ற முக்கிய பொழுதுபோக்கு சேவைகளை பெறலாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, நெட்ஃபிளிக்ஸ் சேவை வழங்கப்படவில்லை.

இந்த ஹெப் மூலம் க்ரோம்கேஸ்ட் சேவை உள்ளதால் ஸ்மார்ட்போனிலிருந்து டிவியில் உள்ளடக்கத்தை ஸ்ட்ரீம் செய்ய வழி வகுக்கின்றது.

டிஷ் டிவி ஆண்ட்ராய்டு டிவி செட்-டாப் பாக்ஸ் மற்றும் டிஷ் SMRT கிட் அறிமுகம்

டிஷ் SMRT கிட் விலை, அம்சங்கள்

டிஷ் SMRT கிட் பற்றி பேசினால், ரூ .1,199 க்கு கிடைக்கும்.  தற்போதுள்ள சந்தாதாரர்கள் மட்டுமே இதை வாங்க முடியும். இது தற்போதுள்ள DishNXT HD பெட்டியுடன் மட்டும் இயங்கும். அலெக்சா வாயிலாக ஸ்மார்ட் டாங்கிள் சிறந்த வாய்ஸ் அசிஸ்டென்ஸ் மற்றும் OTT பயன்பாடுகளைக் கொண்டு வருகிறது. உங்கள் ஸ்மார்ட் ஹோம் சாதனங்களை குரலால் கட்டுப்படுத்தவும் முடியும்.