Tata sky dth

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு சலுகைகளை வழங்கப்பட்டு வரும் நிலையில், 6 மாதங்களுக்குள் மூன்றாவது முறையாக டாடா ஸ்கை டிடிஎச் சேவையில், எஸ்டி செட்-டாப் பாக்ஸ் மற்றும் எச்டி செட்-டாப் பாக்ஸ் ஆகியவற்றின் விலை அதிகபட்சமாக ரூ.300 வரை குறைக்கப்பட்டுள்ளது.

டெலிகாம்டாக் தளம் வெளியிட்டுள்ள குறிப்பில், இப்போது இந்தியாவின் முன்னணி டி.டி.எச் சேவை வழங்குநராக இருக்கும் டாடா ஸ்கை, எஸ்.டி செட்-டாப் பாக்ஸை ரூ.1,099 விலையிலும், எச்டி செட்-டாப் பாக்ஸை ரூ .1,299 விலையிலும் வழங்குகிறது. முன்னதாக, எஸ்டி மற்றும் எச்டி செட்-டாப் பெட்டிகளின் விலைகள் முறையே ரூ.1,399 மற்றும் ரூ 1,499 ஆக இருந்தன, எனவே நிறுவனம் ரூ.300 வரை விலையை குறைத்துள்ளது. இந்த விலை சலுகை தீபாவளி பண்டிகை வரை வழங்கப்பட வாய்ப்புகள் உள்ளது.

பெரும்பாலான சேனல்கள் கட்டணத்தை டாடா உள்ளிட்ட பல்வேறு டிடிஎச் நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளது.  குறிப்பாக ஜீ, சோனி மற்றும் ஸ்டார் இந்தியா போன்ற பல ஒளிபரப்பாளர்கள் சேனல் விலையை அதிகபட்மாக ஒன்றுக்கு ரூ .7 வரை குறைத்துள்ளனர். குறைக்கப்பட்ட விலை அனைத்து சேனல்களுக்கும் பொருந்தாது, ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலவற்றுக்கு மட்டும் கிடைக்கும். உதாரணமாக, மாதத்திற்கு ரூ .19 செலவாகின்ற ஜீ டிவி, ஜீ மராத்தி, ஜீ பங்களா, ஜீ தெலுங்கு, ஜீ கன்னடம் மற்றும் ஜீ சர்தக் ஆகியவை இப்போது ரூ.12  குறைக்கப்பட்டுள்ளன.