RRC Group D Recruitment 2019 : ரயில்வே துறையில் காலியாக உள்ள 1 லட்சத்துக்கும் அதிகமான வேலை வாயுப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் , இன்று மாலை 5 மணி முதல் ஆர்ஆர்பி (Railway Recruitment Board -RRB) இணையதளத்தில் தொடங்குகின்றது.

இன்று மார்ச் 12ந் தேதி 2019-ல் தொடங்குகின்ற ஆன்லைன் விண்ணப்பம், அடுத்த ஏப்ரல் 12 , 2019 வரை நடைபெற உள்ளது. இதற்கான தேர்வு கட்டணம் செலுத்த வேண்டிய இறுதி நாள் ஏப்ரல் 23, 2019 வரை மட்டும் ஆன்லைன் மூலம் செலுத்தலாம் என குறிப்பிடபட்டுள்ளது.

ரயில்வே வேலை வாய்ப்பு குரூப் D தகுதிகள்

கணினி அடிப்படையிலான லெவல் 1 தேர்வுகள்  (CBT) level 1 மற்றும் 2 நடைபெறும் அதன்பிறகு உடற்தகுதி தேர்வுகள் நடைபெறும். தொழில்நுட்பம் அல்லாத பிரிவுகள், பாரா மெடிக்கல் ஊழியர், இளநிலை உதவியாளர், தட்டச்சு, கணக்கர், ரயில் பணியாளர், பயணச்சீட்டு பரிசோதகர் என பல்வேறு பணியிடங்கள் நிரப்ப்பட்ட உள்ளன.

கல்வித் தகுதி

இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு அல்லது ஐடிஐ முடித்தவர்களாக இருக்க வேண்டும். ஐடிஐ சான்றிதழ் கண்டிப்பாக NCVT/SCVT அல்லது தேசிய தொழிற்பயிற்சி சான்றிதழை NCVT மூலம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

இந்த வேலைவாயப்பினை பெற விண்ணிப்பிக்க உங்கள் வயது குறைந்தபட்சமாக 18 வயது முதல் அதிகபட்சமாக 33 வயது வரை இருக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

மொத்த எண்ணிக்கை – 1,03,769 பின் வருவது ரயில்வே  கோட்டம் வாரியான காலியிடங்கள்;-

மத்திய ரயில்வே – 9345
கிழக்கு மத்திய ரயில்வே – 3563
கிழக்கு கடற்கரை ரயில்வே – 2555
கிழக்கு ரயில்வே, CLW & மெட்ரோ – 10873
வட மத்திய ரயில்வே மற்றும் DLW – 4730
வட கிழக்கு ரயில்வே, MCF மற்றும் RDSO – 13153
தெற்கு மத்திய ரயில்வே – 9328
தென் கிழக்கு மத்திய ரயில்வே – 1664
தென் கிழக்கு ரயில்வே – 4914
தென்மேற்கு ரயில்வே மற்றும் RWF – 7167
தெற்கு ரயில்வே மற்றும் ஐசிஎஃப் – 9579
மேற்கு மத்திய ரயில்வே – 4019
மேற்கு ரயில்வே – 10734

எங்கே விண்ணப்பிக்கலாம்

ஆன்லைனில் மட்டும் விண்ணபிக்கலாம் நீங்கள் எந்த பகுதியில் வேலை செய்ய விருப்பமோ அங்கே விண்ணிப்பகலாம். இதற்கான இணையதள முகவரி கீழ் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்த நீங்கள் விண்ணபிக்க www.rrbchennai.gov.in முகவரிக்கு செல்லுங்கள்.

முதலில் இந்த இணையதளத்துக்கு சென்று RRB group D 2019 என்ற பெயருள்ள இடத்தை தேர்வு செய்க

அடுத்து புதிதாக new registration என்பதனை தேர்வு செய்யவும்.

அதனை தொடர்ந்து உங்கள் விபரங்களை உள்ளிடவும்

பிறகு கல்வித் தகுதி மற்றும் உங்கள் தனிப்பட்ட தரவுகளை உள்ளிட்ட பின்னர் ஒருமுறைக்கு இரு முறை சரிபார்த்த பின்னர் தேர்வுக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

தேர்வுக் கட்டணம் எவ்வளவு

இட ஒதுக்கீடு பிரிவுகளில் வராத அனைத்து விண்ணப்பதார்களுக்கும் தேர்வுக் கட்டணம் ரூபாய் 500 வசூலிக்கப்படுகின்றது. தேர்வு எழுதிய பின் கட்டணத்திலிருந்து வங்கி பரிவர்த்தனை கட்டணம் கழிக்கப்பட்டு பிறகு ரூபாய் 400 வரை திரும்பக் கிடைக்கும்.

எஸ்.சி./எஸ்.டி, பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினருக்கு தேர்வுக் கட்டணம் ரூபாய் 250 ஆகும். தேர்வு எழுதிய பின் வங்கி பரிவர்த்தனை கட்டணம் கழிக்கப்பட்டு தேர்வுக் கட்டணம் திரும்பக் கிடைக்கும்.

RRC Group D 2019 நினைவில் கொள்ள வேண்டிய தேதிகள்

விண்ணப்பிக்க தொடங்கும் நாள் – மார்ச் 12ந் தேதி 2019

விண்ணிப்பிக்க இறுதி நாள் – ஏப்ரல் 12, 2019 வரை

கட்டணம் செலுத்த வேண்டிய இறுதி நாள் – ஏப்ரல் 23, 2019 வரை மட்டும்