சல்மான் கான் நடித்துள்ள சுல்தான் படத்தினை அடிப்படையாக கொண்ட ஆண்ட்ராய்டு கேம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தனது டிவிட்டர் பக்கத்தில் சல்மான்கான் சுல்தான் கேம் நன்றாக உள்ளதாக டிவீட் செய்துள்ளார்.

99 கேம்ஸ் நிறுவனம் யஷ் ராஜ் ஃபீலிம்ஸ் உடன் இணைந்து தயாரித்துள்ள சுல்தான் கேம்ஸ் மிகச்சிறப்பான குத்து சண்டை விளையாட்டாக உள்ளது என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தலைசிறந்த மொபைல் வாங்க ; Best Selling mobiles In India 

சுல்தான் திரைப்படம் வருகின்ற ரமலான் கொண்டாட்டத்தின் பொழுது உலகயளவில் திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தில் சல்மான் கான் மல்யுத்த வீரராக நடிக்கிறார். ஆண்ட்ராய்டு மொபைல்களில் இயங்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள சுல்தான் விளையாட்டில் மிக சிறப்பான அனிமேஷன் முறையில் சால்மான் கானை வெளிப்படுத்தியுள்ளனர்.

மொத்தம் 60 லெவல்கள் உள்ள சுல்தான் கேமில் ஒவ்வொரு 10 லெவல்களை கடக்கும் பொழுதும் 3 நட்சத்திரங்களை பெறமுடியும். விளையாட்டில் எடுக்கின்ற நட்சத்திரங்களை பொருத்து புதிய வசதிகளை பெற முடிகின்றது. சிறப்பான பொழுதுபோக்கு அம்சத்தினை கொண்ட குத்து சண்டை கேமாக சுல்தான் கேம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுல்தான் இந்தி திரைப்படத்தில் குத்து சண்டை வீரர்  கதாபாத்திரத்தில் சல்மான் கான் நடிக்கிறார். இந்த படத்தில் நாயகியாக அநுஷ்கா சர்மா நடிக்கிறார். பிரபல இயக்குநர் அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்திலான படத்தை அதித்யா சோப்ரா நிறுவனம் தயாரிக்கிறது. வருகின்ற ரம்ஜான் பண்டிகையில் திரைக்கு வருகின்றது.

சுல்தான் கேம் தரவிறக்க ; SULTAN – The Game