வருகின்ற மார்ச் 23ந் தேதி ஆண்ட்ராய்டில் நின்டென்டோ சூப்பர் மேரியோ ரன் கேம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

சூப்பர் மேரியோ ரன்

முதன்முறையாக இந்த கேம் ஆப்பிள் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் 2016, டிசம்பர் 15 ல் வெளியிடப்பட்டது. வெளிவந்த நான்கு நாட்களுக்குள்  40 மில்லியன் டவுன்லோடுகளை கடந்து சாதனை படைத்தது. மேலும்  ஐஓஎஸ் இயங்குதளத்திலும் 2.0 அப்டேட் விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில வாரங்களாகவே மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வரும் ஆண்ட்ராய்டு பயணர்களுக்கான மேரியோ ரன் விளையாட்டை அதிகார்வப்பூர்வமாக மார்ச் 23ல் அறிமுகம் செய்ய உள்ளது.

நின்டென்டோ நிறுவனத்தின் இந்த கேம் விளையாடுவதற்கு சிறப்பான அனுபவத்தை கொண்டதாக விளங்கும் வகையில் முன்னேறி செல்லும் வகையிலான ஆட்டத்தை பெற்று பல்வேறு இடையறுகளை கடந்து விளையாடும் வகையில் அமைந்திருக்கும். பலதரப்பட்ட இலவச லெவல்களுடன் முழுமையான பதிப்பினை பெற $9.99 (ரூ.680) விலையில் கிடைக்கும்.