ஐரோப்பியா கால்பந்து போட்டிகள் 2016 நடந்து வரும் நிலையில் அதனை கொண்டாடும் வகையில் பேஸ்புக் மெசேன்ஜர் செயிலில் கால்பந்து விளையாட்டினை பேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது.

கடந்த முறை கூடைபந்து போட்டியை மெசேன்ஜரில் வழங்கியது தற்பொழுது வழங்கப்பட்டுள்ள கால்பந்து போட்டியை எவ்வாறு பெற்று விளையாடலாம் என்பதனை தெரிந்துகொள்ளலாம்.

டேவிட் மார்கஸ் வெளியிட்டுள்ள செய்தி மற்றும் வீடியோவில் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட கூடைபந்து விளையாட்டு 1 பில்லியன் முறைகளுக்கு மேல் விளையாடப்பட்டுள்ளது. தற்பொழுது அதே போல கால்பந்து அறிமுகம்  செய்யப்பட்டுள்ளது.

கால்பந்து மெசேன்ஜர் விளையாட்டு பெறும் வழிமுறைகள்

1. உங்களுடைய மெசேன்ஜர் செயலியை மேம்படுத்துங்கள்
2. மெசேன்ஜர் செயலில் உள்ள இமோஜியை திறங்கள்
3. அதில் கால்பந்து போன்ற இமோஜியை நண்பர்களுக்கு அனுப்புங்கள்
4. நீங்களும் கால்பந்து விளையாடலாம்.

எவ்வாறு விளையாடுவது வீடியோ இணைப்பு

Facebook Messenger gets Football game