கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட போக்கிமான் கோ கேம் விளையாடியவர்கள் மொத்தமாக 2,00,000 தடவையை பூமியை சுற்றி வந்துள்ளனர் என போக்கிமான் தெரிவித்துள்ளது.

மொத்தமாக கடந்த 6 மாதங்களில் டவுன்லோட் செய்யப்பட்ட மொத்த எண்ணிக்கை 600 மில்லியன் தடவைகளாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 2016 முதல் டிசம்பர் 2017 வரை நடந்த விபரங்கள் எண்களில்

போக்கிமான் கோ எண்கள் விபரம்

  1. டவுன்லோட் செய்தவர்கள் – 600 மில்லியன்
  2. கைபற்றிய போக்கிமான்கள் – 88 பில்லியன்
  3. தினமும் சராசரியாக கைபற்றிய போக்கிமான்கள் – 553 மில்லியன்
  4. மொத்தமாக நடந்த தொலைவு – 8.7 பில்லியன் கிலோமீட்டர்கள்
  5. பூமியை சுற்றி வந்த முறைகள் – 2,00,000
  6. தினமும் விளையாடுபவர்களின் சராசரி எண்ணிக்கை – 25 மில்லியன்

இந்தியாவில் சமீபத்தில் போக்கிமான் கேம் ஜியோ நிறுவனத்துடன் இணைந்து சமீபத்தில் அதிகார்வப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இது குறித்து போக்கிமான் பதிவிட்டுள்ள வீடியோ பதிவினை கீழே காணலாம்…

வருகின்ற கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சிறப்பு பரிசுகளை கேமில் வழங்க போக்கிமான் நியான்டிக் நிறுவனம் வழங்க உள்ளது.