ஜியோ இலவச சேவை முடிவுக்கு வந்துவிட்டது

Ads

டிராய் அமைப்பின் அறிவுரைப்படி ஜியோ சம்மர் சர்பரைஸ் சலுகைகள் விரைவில் ரத்து செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. சம்மர் சர்பரைஸ் என்ற பெயரில் ஜூன் மாதம் வரை வழங்க இருந்த இலவச சேவை ரத்து செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வருகின்ற ஜூன் மாதம் வரை இலவச சேவை பெற ரூபாய் 99 பிரைம் ரீசார்ஜ் உள்பட ரூ.303 அல்லது அதற்கு மேற்பட்ட பிளானில் ரீசார்ஜ் செய்தால் இலவசமாக ஜூன் வரை வழங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் டிராய் அமைப்பின் எதிர்ப்பை தொடர்ந்து இந்த திட்டத்தை ஜியோ விரைவில் ரத்து செய்ய உள்ளது.

இதுவரை பிரைம் ரீசார்ஜ் மற்றும் முதல் மாத ரீசார்ஜ் போன்றவை மேற்கொள்ளாதவர்கள் உடனே செய்து கொள்ளுங்கள். அடுத்த சில நாட்களுக்குள் பிரைம் உள்பட அனைத்து இலவச சலுகைகளும் ரத்து செய்யப்படலாம்.

ரத்து செய்யபடுவதற்கு முன்னதாக ரீசார்ஜ் செய்துகொண்டால் மூன்று மாத இலவச சேவை வழங்கப்படும் என ஜியோ உறுதி செய்துள்ளது.