ஜியோ பிரைம் உறுப்பினர் ஆவது எப்படி ?

Ads

வருகின்ற மார்ச் 31ந் தேதி உடன் முடிவடைகின்ற ஜியோ 4ஜி ஹைப்பி நியூ இயர் சலுகை நிறைவடைவதனை ஒட்டி ஏப்ரல் 1 முதல் புதிய ஜியோ பிரைம் திட்டத்தின் வாயிலாக சலுகையை ரிலையன்ஸ் ஜியோ வழங்க உள்ளது.

ஜியோ பிரைம் பெறும் வழிமுறை என்ன ?

மார்ச் 1 முதல் மார்ச் 31 வரையிலான காலகட்டத்தில் மைஜியோ ஆப் , ஜியோ இணையதளம் அல்லது ஜியோ டிஜிட்டல் கடைகளின் வாயிலாக ரூபாய் 99 ரீசார்ஜ் செய்தால் நீங்கள் ஜியோ பிரைம் உறுப்பினர் ஆகிவிடுவீர்கள்.

அதன்பிறகு ஏப்ரல் 1 முதல் ஜியோ கட்டண சேவைக்கு மாறிய பின்னர்… அவ்வாறு ஜியோ பிரைம் மெம்பர் ஆன பின்னர் மாதம் ரூ. 303 ரீசார்ஜ் செய்து கொண்டால் தற்பொழுது இலவச சேவையாக நடைமுறையில் உள்ள தினமும் 1ஜிபி 4ஜி டேட்டா அதன் பிறகு 128Kbps வேகத்தில் வரையறையற்ற டேட்டாவும் கிடைக்க உள்ளது.

மேலும் வரம்பற்ற அழைப்புகள் , எஸ்எம்எஸ் , நாடு தழுவிய இலவச ரோமிங் போன்றவற்றை ஜியோ பிரைம் வாடிக்கையாளர்கள் பெறலாம்.  இந்த சலுகையை மார்ச் 31 ,2018 வரை பெற்றுக்கொள்ளலாம்.

ஜியோ சாதனைகள்

  • 170 நாட்களில் 10 கோடி வாடிக்கையாளர்களை ரிலையன்ஸ் ஜியோ பெற்று உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பிராண்டாக ஜியோ உருவெடுத்துள்ளது.
  • விநாடிக்கு 7 வாடிக்கையாளர்கள் ஜியோ சிம் சேவையை பெறுகின்றனர்.
  •  கடந்த மாதம் 100 கோடி ஜிபி டேட்டாக்களை ஜியோவாடிக்கையாளர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
  • ஒவ்வொரு வாடிக்கையாளரும் சராசரியாக தினமும் 3.3ஜிபி டேட்டா பயன்படுத்தியுள்ளனர்
  • தினமும் 200 கோடி வாய்ஸ் மற்றும் டேட்டா அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
  • தினமும் 5.5 கோடி டேட்டா வீடியோ பார்க்கப்பட்டுள்ளது.
  • உலகின் முதன்மையான மொபைல் டேட்டா நாடாக இந்திய உருவெடுத்துள்ளது.

Reliance Jio prime details in Tamil