9 மாதத்தில் 1 மில்லியன் டிவிகளை ஏற்றுமதி செய்த சியோமி நிறுவனம்

கடந்த ஒன்பது மாதங்களில் 1 மில்லியன் மீ LED டிவிகளை ஏற்றுமதி செய்துள்ளதாக சியோமி இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் முன்ன்னணி டிவி பிராண்டாக மீ LED டிவிக்கள் இருந்து வருவதாக வோர்ல்டுஒயிட் குவார்ட்டலி ஸ்மார்ட் ஹோம் டிவைஸ் டிராக்கர் 2018Q2 ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து பேசிய சியோமி இந்தியா நிறுவன கேட்டகிரி மற்றும் ஆன்லைன் சேல்ஸ் நிறுவன அதிகாரி ரகு ரெட்டி தெரிவிக்கையில், இந்த ஸ்மார்ட் டிவிக்களின் ஹார்டுவேர் டிசைனை உருவாக்க பல ஆண்டுகள் திட்டமிட்டோம். மேலும் இதில் இடம் பெற்றுள்ள ஸ்மார்ட் பேட்ச்வால் யூசர் இன்டர்பேஸ் மற்றும் சாப்ட்வேர் பார்ட்னர் ஷிப் போன்றவை வாடிக்கையாளர்களுக்கு சிறந்த ஸ்மார்ட் டிவி பார்க்கும் அனுபவத்தை கொடுக்கும் என்றார்.

9 மாதத்தில் 1 மில்லியன் டிவிகளை ஏற்றுமதி செய்த சியோமி நிறுவனம்

கடந்த நான்கு ஆண்டுகளில் தொடர்சிசயாக ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் சியோமி நிறுவனம் முன்னிலை பெற்றுள்ளது. இதுமட்டுமின்றி கடந்த 9 மாதங்களில் பிரபலமான மீ LED டிவிக்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில் சியோமி நிறுவனம் நொய்டாவை அடிப்படையாக கொண்ட டிக்சான் டெக்னாலஜியுடன் இணைந்து இந்தியாவிலேயே மீ LED டிவிக்களை உருவாக்கக் திருப்பதியில் தொழிற்சாலை ஒன்றை உருவாக்கியுள்ளது.

9 மாதத்தில் 1 மில்லியன் டிவிகளை ஏற்றுமதி செய்த சியோமி நிறுவனம்

32-acre மீ எல்இடி டிவிக்கள் தயாரிப்பில் 850-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த தொழிற்சாலை, 2019ம் ஆண்டின் முதல் காலாண்டில் மாதம் ஒன்றுக்கு 1 லட்சம் மீ LEd டிவிக்களை தயாரிக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என்று சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது.