65 இன்ச் 4K HDR டிஸ்பிளே, 2GB ரேம் உடன் வெளியானது சியோமி மீ டிவி 4

65 இன்ச் 4K HDR டிஸ்பிளே, 2GB ரேம்களுடன் கூடிய சியோமி மீ டிவி 4 சீனாவில் வெளியிடப்பட்டது. சீனாவில் இந்த டிவிகளின் விலை CNY 5,999 ஆகும். இந்திய மதிப்பில் இது தோராயமாக 63,300 ரூபாயாகும்.

சீனாவில் 75 இன்ச் கொண்ட டிவி அறிமுகம் செய்யப்பட்டு ஒரு மாதமே ஆன நிலையில் புதிய மீ டிவி 4 மாடல்கள் வெளியாகியுள்ளது. ஆண்டிராய்டு அடிப்படையிலான பேட்ச்வால் UI மற்றும் அல்ட்ரா-தின் மெட்டல் பாடி கொண்ட இந்த டிவிகள் 7.5mm அளவு கொண்டதாக இருக்கும். மேலும் இந்த டிவிக்கள் டால்பி+DTS ஆடியோ இன்டகிரேஷன் மற்றும் 4K HDR வீடியோ சப்போர்ட் கொண்டதாக இருக்கும். கூடுதலாக 2GB ரேம் மற்றும் 16GB இன்டலிஜென்ஸ் வாய்ஸ் கண்ட்ரோல் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.

65 இன்ச் 4K HDR டிஸ்பிளே, 2GB ரேம் உடன் வெளியானது சியோமி மீ டிவி 4

ஏற்கனவே வெளியாக சியோமி மீ டிவி 4 மாடல்கள் போன்று அல்லாமால், புதிய மீ டிவி 4 மாடல்கள் 65 இன்ச் முழு ஸ்கிரீன் பேணல் மற்றும் 4K HDR பிளேபேக் கொண்டதாக இருக்கும். மேலும் இதில் மினிமல் பேஷல் மற்றும் மெட்டல் பாடி கொண்டதாக இருக்கும். மேலும் குவாட்-கோர் கார்டெக்ஸ் A53 SoC, இத்துடன் 2GB ரேம் மற்றும் 16GB பிளாஷ் ஸ்டோரேஜ் கொண்டிருக்கும். மேலும் இதில் டால்பி+DTS ஆடியோ டிகோடிங் சபோர்ட் கொண்டிருக்கும்.

65 இன்ச் 4K HDR டிஸ்பிளே, 2GB ரேம் உடன் கூடிய புதிய சியோமி மீ டிவி 4-கள் ஆண்டிராய்டு ஆபரேடிங் சிஸ்டம் மற்றும் பேட்ச்வால் UI உடன் இயங்கும். இதில் இடம் பெற்றுள்ள AI வாய்ஸ் சிஸ்டம் பல்வேறு ரிமோட் கண்ட்ரோல் ஆப்சன்களை கொண்டிருக்கும்.

65 இன்ச் 4K HDR டிஸ்பிளே, 2GB ரேம் உடன் வெளியானது சியோமி மீ டிவி 4

65 இன்ச் 4K HDR டிஸ்பிளே, 2GB ரேம் உடன் மீ 4 மாடல்கலை சீனாவில் கிடைக்கிறது. இந்திய உள்பட மற்ற மார்க்கெட்டில் இந்த டிவிக்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிய வந்துள்ளது.