சாம்சங் C9 ப்ரோ ஸ்மார்ட்போன்- முழுவிபரம்

Ads

சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள 6 ஜிபி ரேம் கொண்ட சாம்சங் C9 ப்ரோ ஸ்மார்ட்போன் மிகவும் சக்திவாய்ந்த மாடலாக இந்திய சந்தையில் விளங்க தொடங்கியுள்ளது. சாம்சங் C9 ப்ரோ விலை ரூ. 36,900 ஆகும்.

இந்தியாவில் சாம்சங் அறிமுகம் செய்துள்ள முதல் 6 ஜிபி ரேம் பெற்ற மாடலாக விளங்கும் சி9 ப்ரோ மாடல் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வாயிலாகவும் விற்பனை செய்யப்பட உள்ளது. வருகின்ற ஜனவரி 27 முதல் முன்பதிவு செய்யப்பட உள்ள இந்த மாடல் பிப்ரவரி மத்தியிலிருந்து விற்பனைக்கு கிடைக்கும்

டிஸ்பிளே

6 அங்குல முழு ஹெச்டி (1080×1920) அமோஎல்இடி திரையுடன் 1.95 ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் உடனான ஒரு ஆக்டா-கோர் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 653 soc உடன் இணைந்துசெயல்படவல்ல 6ஜிபி ரேம் இணைக்கப்பட்டுள்ளது. 64 ஜிபி இன்டரனல் மெம்மரியை பெற்று 256ஜிபி வரையில் மைக்ரோ எஸ்டி கார்டு கொண்டு விரிவுப்படுத்த இயலும்.  4ஜி LTE ஆதரவு கொண்டுள்ள கேலக்ஸி சி9 ப்ரோ ம ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ இயங்குதளம் கொண்டுள்ளது.

  • ஸ்னாப்டிராகன்  குவால்காம் 653 SOC
  • Adreno 510 GPU
  • 6  GB RAM
  • ஆண்ட்ராய்ட் மார்ஷ்மெல்லோ 6.0
  • 6 இன்ச் 1080p display
  • 64 GB internal storage
  • 16 MP பின்புற கேமரா
  • 16 MP முன்பக்க கேமரா
  • 256 ஜிபி மைக்ரோ எஸ்டிகார்டு
  • விலை – ரூ.36,900

சி9 ப்ரோ கேமரா

கேலக்ஸி சி9 ப்ரோ முன்பக்கம் மற்றும் பின்பக்கம் இரண்டிலும் 16 மெகாபிக்சல் கேமராவை மெற்று மிகவும் உயர்தரமான படங்களை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. பின்புற 16-மெகாபிக்சல் கேமரா எப்/1.9 அப்பெர்ஷர் மற்றும் ஒரு இரட்டை எல்இடி ப்ளாஷ் கொண்டு 1080p தரத்தில் வீடியோ ரெக்கார்டிங் செய்ய ஏற்றதாக விளங்குகின்றது.  முன்புறத்தில் அமைந்துள்ள 16 மெகாபிக்சல் செல்பீ கேமிரா அதே அப்பெர்ஷர் மற்றும் ப்ளாஷ் போன்றவற்றை பெற்றுள்ளது.

ஆதரவு 

4ஜி, எல்டிஇ,ப்ளூடூத் வி4.2, வைஃபை, ஜிபிஎஸ், க்ளோனாஸ், பெய்டோ, என்எப்சி, யுஎஸ்பி டைப் சி போன்றவற்றை பெற்றுள்ள சி9 ப்ரோ மொபைலில் 4000 mAh வரையிலான பேட்டரி இருப்பினை பெற்று அதிக நேரம் தாங்கும் வல்லமை பெற்று விளங்குகின்றது.

போட்டியாளர்கள்

சாம்சங் C9 ப்ரோ மாடல் ஒன்ப்ளஸ் 3 மற்றும் லீஈகோ லீ மேக்ஸ் போன்ற மாடல்களுக்கு சவாலாக அமைந்துள்ளது.

விலை

சாம்சங் C9 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை ரூ.36,900 ஆகும்.