நுபியா M2 ஸ்மார்ட்போன் விலை, நுட்ப விபரம் மேலும் பல

Ads

ZTE  நிறுவனத்தின் நுபியா ஸ்மார்ட்போன் பிராண்டில் புதிய நுபியா M2 மொபைல் ரூ. 22,999 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. வரும் ஜூலை 10 முதல் அமேசான் பிரைம் தினத்தில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

 

நுபியா M2 ஸ்மார்ட்போன்

சில மாதங்களுக்கு முன்னதாக சீனாவில் இசட்டிஇ நிறுவனத்தின் நூபியா பிராண்டில் வெளிவந்த எம்2 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ரூ.22,999 விலையில் அமேசான் இணையதளத்தின் பிரைம் தினம் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் பிரைம் பயனாளர்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

டிசைன் & டிஸ்பிளே

நுபியா பிராண்டின் ஸ்டைலிசான் டிசைன் அம்சத்தை பெற்ற எம்2 மொபைல் டூயல் கேமரா வசதியுடன் கூடிய கோல்டு மற்றும் பிளாக் கோல்டு போன்ற நிறங்களுடன் 5.5-இன்ச் முழு எச்டி AMOLED 1920 x 1080 பிக்சல் தீர்மானம் பெற்ற டிஸ்பிளேவுடன் 2.5டி வளைந்த கிளாஸ் அம்சத்துடன் கூடிய கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பினை பெற்றுள்ளது.

பிராசஸர் & ரேம்

நுபியா எம்2 மொபைல்போனில் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ இயங்குதளத்தின் பின்னணியாக கொண்ட நூபியா 4.0 தளத்துடன் கூடிய குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 MSM8953 ஆக்டோ-கோர் பிராசஸர் பெற்று 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடங்கிய மெமரி மற்றும் கூடுலாக 200ஜிபி வரை நீட்டிக்க மைக்ரோஎஸ்டி அட்டை ஆப்ஷனை கொண்டுள்ளது.

கேமரா

பின்புறத்தில் இரண்டு 13 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டு சோடனி CMOS சென்சார், f/2.2, 4கே வீடியோ தரம், பிடிஏஃப், ஹைபிரிட் ஃபோகஸ் மற்றும் ஆர்ஜிபி போன்றவற்றை பெற்றுள்ளது. முன்புறத்தில்  செல்ஃபீ படங்கள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 16 மெகாபிக்சல் கேமரா 2μm பிக்சல் தீர்மானத்துடன் உள்ளது.

பேட்டரி

இசட்டிஇ நிறுவனத்தின் நியோபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் 2.5 நுட்பத்துடன் கூடிய 3,630mAh பேட்டரி திறனால் நுபியா எம்2 மொபைல் இயக்கப்படுவதுடன், நாள் முழுமைக்கான சார்ஜிங் திறனை பெற ஒருமுறை சார்ஜ் செய்தாலே போதுமானதாகும்.

மற்றவை

4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, புளூடூத் 4.0, மற்றும் யூஎஸ்பி போன்றவற்றுடன் இரு விதமான கணக்குளை இயக்கும் வகையிலான வாட்ஸ்ஆப், மெசேஞ்சர் மற்றும் ஃபேஸ்புக் ஆப்களுடன் வந்துள்ளது.

விலை

அமேசான் பிரைம் பயனாளர்களுக்கு மட்டுமே ஜூலை 10, ஜூலை 11 போன்ற நாட்களில் பிரத்தியேகமாக அமேசான் இணையதளத்தில்ரூ. 22,999 விலையில் நுபியா எம்2 மொபைல் விற்பனை செய்யப்பட உள்ளது.

Comments

comments