4ஜி ஆதரவு பெற்ற கார்பன் K9 கவாச் விலை ரூ. 5290 மட்டுமே..!

Ads

அரசின் டிஜிட்டல் பண பரிவர்த்தனை பீம் ஆப் இணைக்கப்பட்டு 4ஜி ஆதரவு வோல்ட்இ பெற்ற கார்பன் K9 கவாச் மொபைல் ரூ.5290 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

கார்பன் K9 கவாச்

இந்தியாவைச் சேர்ந்த கார்பன் மொபைல் நிறுவனத்தின் புதிய மொபைலில் யூபிஐ வழங்கி டிஜிட்டல் பண பரிவர்த்தனை செயலி பீம் ஆப் இணைக்கப்பட்டு 4ஜி ஆதரவுடன் கார்பன் K9 கவாச் பட்ஜெட் விலையில் வெளியிடப்பட்டுள்ளது.

கார்பன் K9 கவாச் மொபைலில் 5 அங்குல 720×1280 பிக்சல் தீர்மானம் பெற்ற திரை அமைப்புடன் கூடிய 1.25 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர் கொண்டு இயக்கப்படுகின்ற 1ஜிபி ரேம் பெற்று 8ஜிபி சேமிப்பு வசதியுடன் வந்துள்ளது.

ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் தளத்தில் செயல்படுகின்ற இந்த மொபைலில் இரட்டை சிம் கார்டு ஸ்லாட் பெற்ற பின்புறத்தில் 5 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

4G LTE ஆதரவு வை-ஃபை, புளூடூத், எஃப்எம் ரேடியோ மற்றும் மைக்ரோ யூஎஸ்பி போன்றவற்றை பெற்ற இந்த மொபைலில் நாள் முழுமைக்கு தாங்கும் வகையில் 2300mAh பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்றது.

கார்பன் கே9 கவாச் மொபைல் விலை ரூ.5290 மட்டுமே..